இந்திய அளவில் சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுபவர் நடிகர் ராஷ்மிகா மந்தனா. உண்மையிலேயே அவரது இளமையும் அழகும் ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கும் அந்த வசீகரத் தோற்றமும் நேஷனல் கிரஷ் என்ற அந்த பட்டப் பெயருக்கு ராஷ்மிகா தகுதியானவராக தான் இருக்கிறார்.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து தேவதாஸ், சீதாராமம், டியர் காமரேட், செம திமிரு போன்ற படங்களில் நடித்தார். தமிழில் வாரிசு, சுல்தான், ஆகிய படங்களில் விஜய் மற்றும் கார்த்திக் ஜோடியாக நடித்தார்.
அதே போல் தெலுங்கில் அல்லு அர்ஜுனாவுடன் ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பும் நடனமும் மிகவும் சிறப்பாக இருந்தது. இப்போது புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா மந்தனா அதே கேரக்டரில் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு புஷ்பா 2 வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அறிவித்த வரும் டிசம்பர் 6ம் தேதி கண்டிப்பாக புஷ்பா 2 படம் வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் சுகுமாரன் கூறியிருக்கிறார் எனினும் இன்னும் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பகத் பாசில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள இந்த படம், பெரிய பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு தமிழ் படங்களில் நடித்ததை தொடர்ந்து இந்தியிலும் அவர் நடித்தார். குறிப்பாக அனிமல் படத்தில் அவர் ரன்வீர் சிங் உடன் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா மந்தனா சினிமாவில் மட்டுமின்றி நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தங்கலான் படம் வெளியானது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் சிறப்பாக நடித்து பலத்த பாராட்டை பெற்றார். ஆனால் ஆரத்தி என்ற மாளவிகா மோகனன் நடித்த கேரக்டரில், டைரக்டர் பா ரஞ்சித் நடிக்க அணுகியது ராஷ்மிகா மந்தனாவைதான். ஆனால் அப்போது அவர் புஷ்பா 2 படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் ஒதுக்கித்தர முடியவில்லை. அதனால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.அதன் பிறகுதான் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக மாளவிகா மோகனன் நடித்தார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.





