நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதாகோவிந்தம் படம் ரசிகர்கள் மத்தியில் ராஷ்மிகா மந்தனாவுக்கு நல்ல வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து தேவதாஸ் டியர் காமரேட் சீதாராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இதைத் தொடர்ந்து புஷ்பா புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து இந்தியில் அனிமல் படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். இதற்கிடையே தமிழில் கார்த்தியுடன் சுல்தான் விஜயுடன் வாரிசு தனுஷூடன் குபேரா ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால் இந்த 3 படங்களுமே தமிழில் பெரிய வரவேற்பை வெற்றியை பெறாத படங்களாக அமைந்துவிட்டன. அதனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் பலத்த ஏமாற்றமடைந்தார். தமிழில் நடித்தால் மட்டுமே பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆக முடியும் என்பதால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்போது காஞ்சனா 4 படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டேவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இன்னும் ஒரு பாலிவுட் நடிகையும் இந்த படத்தில் இருக்கிறார். ஆக இந்த முறை காஞ்சனா 4 படத்தில் பிரபல நடிகைகளை எல்லாம் பேய் கெட்டப்பில் திரையில் உலவ விட்டு ரசிகர்களை மிரட்டும் சம்பவத்தை ராகவா லாரன்ஸ் செவ்வனே செய்து வருகிறார்.
ஏற்கனவே ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திரில்லர் திகில் சீரிஸ் படங்களாக வெளிவந்த முனி காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து இப்போது காஞ்சனா 4 படமும் உருவாகி வருகிறது. வழக்கமாக பேய் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிப்பதுதான் வழக்கம். இந்த முறை பிரபல நட்சத்திர நடிகைகளை ராகவா லாரன்ஸ் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்.
தமிழில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா நடித்த சுல்தான் வாரிசு குபேரா ஆகிய 3 படங்களுமே பெரிய வரவேற்பை பெற்றுத் தராத நிலையில், காஞ்சனா 4 படம் மூலம் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தனது கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்ய தயாராகி இருக்கிறார். ரசிகர்களை குலை நடுங்கும் விதமான கெட்டப்புகளில் மிரட்டி தமிழில் முன்னணி நடிகையாக வந்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா, நிஜ காஞ்சனாவாகவே மாறிவிடுவார் போல் இருக்கிறது என படக்குழுவினர் கிண்டலடிக்கின்றனர்.





