நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான கருப்பு படமும் அதைத் தொடர்ந்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான படங்களில் இந்த 2 படங்கள் மட்டுமே அவருக்கு கம்பேக் தந்தன.
மற்றபடி சிங்கம் 2 படத்துக்கு பிறகு சூர்யா நடித்த 12 படங்களில் ஜெய்பீம் சூரரை போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே ஓடிடியில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றன. மற்ற 10 படங்களும் தியேட்டர்களில் வெளியான படுதோல்வி படங்களாக இருந்தன.
குறிப்பாக கங்குவா எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி சிங்கம் 3 காப்பான் அஞ்சான் 24 தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தன.
இந்நிலையில் கருப்பு படம் ரூ. 350 கோடி வரை வசூலை குவித்தது. அதன்பிறகு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. அடுத்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகும் சூர்யாவின் 47வது படமும் மாஸ் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் 50வது படம் குறித்து பல தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் கதையில் இயக்குனர் ஷங்கர் டைரக்ட் செய்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். இது ரோலக்ஸ் அல்லது கைதி 2 படமாகவும் உருவாகலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இப்போது சூர்யாவின் 50வது படத்தை கருப்பு படத்தின் 2ம் பாகமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஆர்ஜே பாலாஜி தான் கருப்பு படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தார். சூர்யாவுக்கு படத்தில் அதிக வாய்ப்பு இல்லை. அதே போல் கருப்பு 2 படமும் ஆர்ஜே பாலாஜி படமாக மாறிவிடுமா என்ற அச்சமும் சூர்யா ரசிகர்களிடம் உள்ளது. ஆனால் இது இன்னும் உறுதியாகவில்லை. மற்ற சில இயக்குனர்களின் பெயரும் இதில் அடிபடுகிறது.





