- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவுக்கு இசை தெரியுமா? இசைக் கருவிகளை வாசித்து காட்டச் சொன்ன பிரபல வில்லன் நடிகர் -...

இளையராஜாவுக்கு இசை தெரியுமா? இசைக் கருவிகளை வாசித்து காட்டச் சொன்ன பிரபல வில்லன் நடிகர் – அவரே போட்டுடைத்த சீக்ரெட் தான் இது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் சங்கிலி முருகன். எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்ற சங்கிலி முருகன் 1979ம் ஆண்டு வெளியான பொண்ணு ஊருக்கு புதுசு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள் ஒரு கை ஓசை சட்டம் ஒரு இருட்டறை கழுகு கொடி பறக்குது தேவர்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய ஒரு கை ஓசை படத்தில் சங்கிலி என்ற கதாபாத்திரத்தில் முருகன் நடித்திருந்தார்; அந்த படத்தில் இருந்து அவருக்கு அடைமொழியாக சங்கிலி என்ற பெயர் உருவானது. இப்போதும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் சங்கிலி முருகன், புலி மனிதன் ராட்சசன் மாரி 2 மண்டேலா கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சங்கிலி முருகன் கூறியதாவது, அப்போதெல்லாம் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை. திருச்சியில் ஒரு நாடகம் நடத்த திட்டம். அதற்கான அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு 4 மணி அளவில் வந்து வீட்டில் உட்கார்ந்தேன். அப்போது 2 பேர் உள்ளே வந்தார்கள். நான் அவர்களிடம் நீங்கள் யார்? என்ற போது நாங்கள் பாவலர் வரதராஜனின் தம்பிகள் என்றார்கள். அவர்கள்தான் இளையராஜாவும் அவரது சகோதரர் பாஸ்கரும்.

அவர்கள் திடீரென்று நாங்கள் இசை கருவிகளை வாசிப்போம்; நீங்கள் நாடகம் நடத்துவதாக கேள்விப்பட்டோம்; அதில் நாங்கள் வாசிக்க வேண்டும் என்று கேட்டனர். உடனே எனக்கு அதிர்ச்சி. அப்பொழுதுதான் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தேன். அதற்குள் எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று. உடனே நான் எப்பொழுது வந்தீர்கள் என்று கேட்டேன். இப்போது தான் வந்தோம் என்று சொல்லி பெட்டியை காண்பித்தார்கள். ஊரிலிருந்து நேராக இங்குதான் வருகிறோம் என்றார்கள்.

- Advertisement -

உடனே நான் அவர்களிடம் உங்களுக்கு ஆர்மோனியம், தபலா வாசிக்க தெரியுமா என்று கேட்டு அவர்களை சோதனை செய்ய நினைத்தேன். அவர்கள் மிருதங்கம் மற்றும் தபலா வைத்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் கமலாவிடம் அழைத்து சென்று, இவர்களுக்கு வாசிக்கத் தெரியுமா? என்று சோதனை செய்ய சொன்னேன். கமலாவும் அவர்களை சோதனை செய்துவிட்டு, நன்றாக வாசிக்கிறார்கள் என்று சொன்னாள்.

தொடர்ந்து எங்கு தங்குவீர்கள் என்று கேட்டபோது, தங்குவதற்கு இடமில்லை என்று அவர்களின் மொத்தக்கதையையும் சொன்னார்கள். உடனே கமலா, தான் கோடம்பாக்கத்தில் கட்டி பூசாமல் இருந்த வீட்டை அவர்கள் தங்குவதற்கு கொடுத்தாள். பின்னாளில் அவர்கள் 2 பேரும் பெரிய ஆளாகி விட்டார்கள். ஒரு கட்டத்தில் பின்னணி இசைக்காக நான் இளையராஜாவிடம் காத்திருப்பேன். அப்போது பாஸ்கர், எங்களுக்கு இசை தெரியுமா என்று சோதனை செய்தது அண்ணன் ஒருவர் மட்டும்தான் என்று என்னை கிண்டலடிப்பார் என்று நடிகர் சங்கிலி முருகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்