தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரபாஸ். ஆனால் பாகுபலி கல்கி 2898 சலார் படங்களுக்கு பிறகு பான் இந்தியா ஸ்டார் நடிகராக நடிகர் பிரபாஸ் மாறிவிட்டார். அவரது இமேஜ் இந்திய அளவில் மிகப்பெரிய உச்சத்துக்கு சென்றுவிட்டது. அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பான் இந்தியா படங்களாக மிக பிரமாண்டமாக தான் உருவாக்கப்படுகின்றன.
இப்போது இந்திய நடிகைகளில் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் அளவுக்கு ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில்தான் இவரும் அறிமுகமானார். கீதா கோவிந்தம் படம் இவருக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து தமிழில் நடிகர் விஜயுடன் வாரிசு நடிகர் கார்த்தியுடன் சுல்தான் ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்தார். ஆனால் இந்த 2 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் தமிழில் ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் இந்த 2 படங்களிலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திருந்தது.
ஆனால் தமிழ் படங்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்த போதிலும் பான் இந்தியா படங்களாக தெலுங்கில் உருவான புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்கள் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. 2022ம் ஆண்டில் வெளியான புஷ்பா 450 கோடி ரூபாயும், 2024ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 படம் 1800 கோடி ரூபாயும் வசூலித்தன.
இந்நிலையில் அனிமல் ச்சாவா போன்ற இந்தி படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்து இந்தி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றார். இந்தி நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு ராஷ்மிகா மந்தனா முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் காட்டும் தாராளமான கவர்ச்சியை பார்த்து அசந்து போயிருக்கின்றனர்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தில் ராஸ்மிகா மந்தனா நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் நீக்கப்பட்டு வேறொருவர் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. ஆனால், இந்த படத்தில் நடிக்க ராஸ்மிகாவிடம் கேட்டபோது, ஜூன் மாதம் வரை வேறு படங்களுக்கு கால்சீட் கொடுத்திருப்பதால் அதன்பிறகுதான் கால்சீட் தர முடியும் என்று அவர் கூறியதால் வேறு நடிகைக்காக தேர்வு நடப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த சிக்கந்தர் படம் படுதோல்வி அடைந்ததால், பிரபாஸ் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





