- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, ரெண்டாவது தடவை பார்த்தாதான் படம் இன்னும் நல்லா புரியுமா - பேசாம, டிக்கெட் வாங்கும்போதே...

என்னது, ரெண்டாவது தடவை பார்த்தாதான் படம் இன்னும் நல்லா புரியுமா – பேசாம, டிக்கெட் வாங்கும்போதே கதைச்சுருக்கம் ஜெராக்ஸ் தந்துடலாமே

- Advertisement -

லியோ படம், மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. கைதி, விக்ரம் படங்கள் அளவுக்கு, லியோ படம் ரசிகர்களை மிரளவைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பல விஷயங்களில், லோகேஷ் கனகராஜ் ஏமாற்றி விட்டார் என்று ரசிகர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். விஜய் ரசிகர்களை திருப்திபடுத்த, தனது தனித்துவத்தை லோகேஷ் கனகராஜ் இழந்து விட்டாரோ எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதில் முக்கிய குறைபாடு திரைக்கதை தான். பார்த்திபன், லியோ இருவரும் ஒருவரா, இல்லையா என்ற சஸ்பென்ஸ் போன்ற ஆள்மாறாட்ட கதைகள், தமிழ் சினிமாவில் புளித்துப்போன விஷயம். பாட்சா கதையும் அதுதான். தெறி கதையும் அதுதான். எனவே, படத்தின் மையக்கருவே ரசிகர்களை உச் கொட்ட வைக்கிறது.

அடுத்து, மிகச் சிறந்த நட்சத்திர கூட்டம் படத்தில் இருந்தும், அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுப்பதில், மிகப்பெரிய சறுக்கல், இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் போன்ற சிறந்த நடிகர்களுக்கு, அவர்களுக்கான காட்சிகளை இன்னும் பல நிமிடங்கள் நீடித்திருக்க வேண்டிய நிலையில், விளம்பர படத்தில் வருவது போல, வந்தவுடன் அவர்கள் மாயமாகி விடுகின்றனர்.

நரபலி என்கிற விஷயம் எல்லாம், பல ஆண்டுகளாக தமிழ் சினிமா அரைத்து, அரைத்து துடைத்து தூர வீசிய விஷயம். 30, 35 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வந்த கழுகு படம், இந்த கதை தான். காக்கா, கழுகு கதையை ரஜினி சொன்னதால், அந்த கழுகு பட கான்செப்ட்டை லியோ படத்தில் இயக்குநர் கொண்டு வந்தாரா எனப் புரியவில்லை.

இந்நிலையில், லியோ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த, லோகேஷ் கனகராஜின் நண்பர், மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னக்குமார் நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது, குடும்ப சென்டிமென்ட் என்பது, உலகளாவிய ஒரு உணர்வு சார்ந்த விஷயமாக இருக்கிறது. த்ரிஷியம் படத்தின் வெற்றி அதில்தான் இருக்கிறது. அவதார் படத்தில் கூட அந்த அம்சம் முக்கியமாக உள்ளது.

விஜய் சாதாரணமாக பேசும் ஒரு டயலாக் கூட, அதை அவர் பேசும் விதம் காரணமாக டிரண்டிங் ஆகி விடுகிறது. அப்பா – மகன், கணவன் – மனைவி, பேமிலி மேன் என்ற இயல்பான எமோஷனலை இந்த படம் அடிப்படையாக கொண்டது. இந்த படத்தை ஒருமுறை பார்த்தால் புரியாது. இரண்டாவது முறை பார்த்தால்தான், பல நுணுக்கமான விஷயங்களை, காட்சிகளை ரசிக்க முடியும். அதை புரிந்துக்கொள்ள முடியும் என்று கூறி இருக்கிறார் ரத்னக்குமார்.

சற்று முன்