- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர்களிடம் இரட்டை விரலை காட்டும் நடிகர் அஜித்குமார்; என்னப்பா எலெக்சன் நேரத்துல பிரசாரம் பண்றாரா?...

தயாரிப்பாளர்களிடம் இரட்டை விரலை காட்டும் நடிகர் அஜித்குமார்; என்னப்பா எலெக்சன் நேரத்துல பிரசாரம் பண்றாரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் அஜித்குமார், இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லீ என்ற படத்தில் நடிக்கிறார். இதுவரை அஜீத்குமார், எந்த அரசியல் கட்சிக்கும் தனது ஆதரவை தெரிவித்ததில்லை. குறிப்பிட்ட கட்சிக்கு முக்கியத்துவம் தந்து அவர் பேசியது இல்லை. எந்த இடத்திலும் அவர் தன்னை குறிப்பிட்ட கட்சி சார்ந்த ஆதரவாளராக காட்டிக் கொண்டதில்லை.

ஆனால், முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதிக்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அப்போது கருணாநிதி, ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலையில், மேடையில் பேசிய அஜீத்குமார், என்னை இந்த விழாவுக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தி மிரட்டினார்கள் என, பகிரங்கமாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், நடிகர் அஜித்குமாருக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒருமுறை காரில் முதல்வர் ஜெயலலிதா செல்லும் போது அஜித்குமாரை வழியில் பார்த்துவிட்டு காரை நிறுத்த சொல்லி, அவரே இறங்கி வந்து அஜித்குமாரிடம் நலம் விசாரித்து பேசி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா, தனது இறுதி காலகட்டத்தில் நடிகர் அஜித்குமாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று அவர் கூறியதாகவும், ஆனால் சசிகலா தரப்பினர் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த விவரத்தை அஜித்குமாரிடம் சொல்லாமல் மறைத்து, அஜித்குமார் ஜெயலலிதாவை சந்திக்க விடாமல் செய்து விட்டதாகவும் ஒரு தகவல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில், ஜெயலலிதாவின் குட்புக்கில் அஜீத்குமார் இருந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சமீபமாக தன்னை சந்திக்க வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இரட்டை விரலை காட்டிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ஒரு வேளை நடிகர் அஜித்குமார் அதிமுகவுக்கு ஆதரவாக தான் இரட்டை விரலை காட்டுகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், அப்படி எதுவும் இல்லை. நடிகர் அஜித்குமார் இப்போது நடித்துவரும் விடாமுயற்சி படத்துக்கும், அதேபோல் அடுத்து நடிக்க உள்ள குட் பேட் அக்லி படத்துக்கும் தலா 163 கோடி தான் அவருடைய சம்பளமாக உள்ளது. ஆனால் அதன் பிறகு, அஜீத்குமார் நடிக்கும் படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்று அவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறார். அதனால்தான் தன்னை சந்திக்க வரும் தயாரிப்பாளர்களிடம் அவர் 200 கோடி ரூபாய் சம்பளம் என்பதை, குறியீடாக இரண்டு விரலை காட்டிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது

- Advertisement -

சற்று முன்