- Advertisement -
Homeபொழுதுபோக்குதன் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனத்தினம் ரூ. 9 கோடி இழப்பீடு கேட்ட நடிகர்...

தன் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனத்தினம் ரூ. 9 கோடி இழப்பீடு கேட்ட நடிகர் ரவி மோகன் – இது வேற லெவல் சம்பவமா இருக்குதே ப்ரோ…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவிமோகன். இப்போது பராசக்தி கராத்தே பாபு உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரவி மோகன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் புகார் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் 2 படங்களில் நடிகர் ரவிமோகன் நடிக்க கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்துக்கு சம்பளமாக 15 கோடி ரூபாய் பேசி அதில் 6 கோடி ரூபாய் அட்வான்ஸ் தந்தோம். ஆனால் ஒப்பந்தப்படி எங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவனங்களின் படங்களில் அவர் நடித்தார்.

- Advertisement -

நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் முன் பணத்தை திரும்ப தந்து விடுவதாகவும் நடிகர் ரவி மோகன் கூறினார். ஆனால் இதுவரை பணத்தை கொடுக்கவில்லை. அதேநேரம் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் வாயிலாக ப்ரோகோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக ரவி மோகன் அறிவித்துள்ளார். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எங்களிடம் அவர் வாங்கிய பணத்தை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனு குறித்து பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் நிறுவனம் மீது நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, பாபி டச் கோல்ட் யுனிவர்சல் நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. 2025ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்சீட் தந்திருந்தேன்.

- Advertisement -

ஆனால் இதுவரை படப்பிடிப்பை அவர்கள் துவங்கவில்லை. பிறகு ஜூன் மாதமும் கால்ஷீட் ஒதுக்கினேன். அப்போதும் அவர்கள் படத்தை துவங்கவில்லை. இதனால் அந்த ஒப்பந்தம் முடிந்து விட்டது. நானும் படத்தில் இருந்து விலகி விட்டேன். இதனால் என்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு ஏற்பட்ட இந்த இழப்புக்கு அந்த நிறுவனம் 9 கோடி ரூபாய் எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று ரவிமோகன் அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரவிமோகன் தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகர் ரவிமோகன் பணத்தை திருப்பி தர தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான பின் அந்த பணத்தை தருவதாக சொன்னார். ஆனால் 7 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்கின்றனர் என வாதிட்டார். தயாரிப்பு நிறுவனம் தரப்பு வக்கீல், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி பராசக்தி படத்தில் ரவிமோகன் நடிக்கிறார் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

- Advertisement -

சற்று முன்