- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது மனைவி ஆர்த்திக்கு 24 மணி நேரம் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பிய நடிகர் ரவி...

தனது மனைவி ஆர்த்திக்கு 24 மணி நேரம் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பிய நடிகர் ரவி மோகன், மாமியாருக்கும் அதே கண்டிஷன்தான் – என்னப்பு இப்படி பண்றீக…?

- Advertisement -

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டில் ஆர்த்தி, ரவி மோகன் காதல் திருமணம் செய்தனர். 10 வயதில் 14 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்த சூழலில் கடந்தாண்டில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்தார். மேலும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்தார்.

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் பாடகி கெனிஷாவுடன் நெருங்கிய நட்பில் ரவி மோகன்இருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆர்த்தி மற்றும் அவரது அம்மா அதாவது ரவி மோகனின் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியார் இந்த விவகாரம் குறித்து நான்கைந்து முறை தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பதிவுகளை செய்தனர்.

- Advertisement -

இந்த பதிவுகளில் நடிகர் ரவிமோகன் குறித்த பல்வேறு விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். அதிலும் சினிமா தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் ரவி மோகன் நடித்த படங்களுக்காக நான் வாங்கிய 100 கோடி ரூபாய் கடன்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பதிவில் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் கடும் விமர்சனத்தில் சிக்கிய நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியான பாடகி கெனிஷா, சில தினங்களுக்கு முன் லீகல் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டார். அதில் தன்னை பற்றிய கடும் விமர்சனங்கள், பதிவுகள் அனைத்தும் 24 மணி நேரத்துக்குள் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லை எனில் சட்டப்பூர்வ நடவடிக்கை அவர்கள் மீது பாயும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இப்போது நடிகர் ரவி மோகனும் அதே பாணியில் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை மனைவி ஆர்த்திக்கு அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, நடிகர் ரவி மோகன் திருமண சர்ச்சை தொடர்பான அனைத்து அவதூறு செய்திகளையும் 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். பேஸ்புக் எக்ஸ் டெலிகிராம் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்சப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும்.

அப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவதூறு கருத்துக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு தனது வழக்கறிஞர் மூலம் நடிகர் ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்