- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டார் படத்தில் அப்படி ஒரு தரமான சம்பவம் நடந்தது உண்மையா? நடிகர் கவினுக்கு இப்படி ஒரு...

ஸ்டார் படத்தில் அப்படி ஒரு தரமான சம்பவம் நடந்தது உண்மையா? நடிகர் கவினுக்கு இப்படி ஒரு சப்போர்ட்டா? – வேற லெவலா இருக்குதே ப்ரோ…

- Advertisement -

நடிகர் கவின் விஜய் டிவியில் சீரியலில் நடித்து பிரபலமானவர் என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் அவர் அதிகளவில் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். ஏனெனில் பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் காதல் மன்னனாக வலம் வந்தார்.

சக போட்டியாளரான இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவை விழுந்து விழுந்து காதலித்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவையே சுற்றிச் சுற்றி வந்தார். இதனால் அந்த நிகழ்ச்சியும் பிரபலமானது. கவின் லாஸ்லியாவும் பிரபலமாகினர். ஆனால் ஒரு கட்டத்தில் லாஸ்லியா கவினை கண்டு கொள்ளவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டை வெளியிட்டு வெளியே வந்த பிறகு, லாஸ்லியா, கவின் நட்பு தொடரலாம் என்று கூறப்பட்டது. ஆனால் கவின் லாஸ்லியா பின்னால் சுற்றாமல் சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவர் நடித்த டாடா, லிப்ட் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி படங்களாக அமைந்து பெரிய ஹீரோவாக மாறினார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இப்போது ஸ்டார் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரில் இடம் பெற்ற காட்சிகள் கவினை வேற லெவலில் காட்டியுள்ளது. அதனால் ஸ்டார் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் கவின். விஜய் டிவி தான் இவரை முதலில் அறிமுகப்படுத்தியது. பிறகு விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் கவினுக்கு ஒரு மிகப்பெரிய அறிமுகத்தை மக்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

- Advertisement -

அதேபோல் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குள் வந்து இப்போது மிகப்பெரிய முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் இப்போது ஒரு படத்துக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு மிகப்பெரிய முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த அயலான் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளிவர உள்ள அமரன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே கவின் வளர்ச்சி பெற்று வருவதால், அவரை அடுத்த சிவகார்த்திகேயன் என்றும் இப்போது சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் இருவருமே விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் தான். இந்த சூழலில் ஸ்டார் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது. அதாவது கல்லூரி மாணவராக இருக்கும் கவின் நடிகராக மாறுவது தான் படத்தின் மையக்கரு. அப்படி ஒரு நடிகராக கவின் வெற்றி பெறும்போது அவருடன் நடிக்கும் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், படத்தில் நடிகராகவே வருகிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்