- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்துக்கு விஜய் படமே போட்டியாக மாறிடுமா? ரி ரிலீஸில் சிக்ஸர்களாக அடித்து ஆடி வரும்...

விஜய் படத்துக்கு விஜய் படமே போட்டியாக மாறிடுமா? ரி ரிலீஸில் சிக்ஸர்களாக அடித்து ஆடி வரும் சச்சின் – தளபதி படம்னாலே வேற லெவல்தான்!

- Advertisement -

நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்ற பெயரும் உள்ளது. ஏனென்றால் அவரது படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக பெரிய லாபத்தை தந்து விடுகிறது. உதாரணமாக வாரிசு பீஸ்ட் லியோ படங்கள் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக கணிசமான லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு அள்ளித் தந்தது.

இப்போது நடிகர் விஜய் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற மே 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த ஆண்டில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது ரி ரிலீஸ் சீசனாக இருக்கிறது. 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட பழைய சூப்பர் ஹிட் படங்கள் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகு ஏற்றப்பட்ட மீண்டும் திரைக்கு வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக கேப்டன் பிரபாகரன் ஆட்டோகிராப் பம்மல் கே சம்பந்தம் காதலுக்கு மரியாதை உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

கடந்த ஆண்டில் நடிகர் விஜய் திரிஷா நடித்த கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை தளபதி ரசிகர்கள் தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடி வரவேற்று மகிழ்ந்தனர். பல தியேட்டர்களில் வாரக்கணக்கில் கில்லி படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியது. 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படம் ரூ. 22 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் நடிகர் விஜய் நடித்த சச்சின் படம் வெளியானது. கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நாயகியாக ஜெனிலியா நடித்திருந்தார். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். ரகுவரன் வடிவேலு தாடி பாலாஜி பிபாசா பாஸூ சாம்ஸ் தலைவாசல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடந்த 18ம் தேதி சச்சின் படம் தமிழ்நாட்டில் ரி ரிலீஸான நிலையில், கடந்த 5 நாட்களில் ரூ. 12 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கடந்தாண்டில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படத்தை விட இந்த ஆண்டில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படம், வசூலில் முந்தி விடும் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு விஜயே போட்டியாக வந்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் குதூகலிக்கின்றனர்.

சற்று முன்