போர்க்களத்துக்கு செல்லும் வீரன் கையில் வாள் இல்லாமல் செல்வதைப் போல தேர்வறைக்குள் செல்லும் மாணவன் கையில் பேனா இல்லாமல் செல்வதை போல சினிமா இயக்க வரும் டைரக்டர்கள் பலரும் கதையே இல்லாமல் களத்துக்கு வருவது மிகவும் விசித்திரமாக விந்தையாக தான் இருக்கிறது.
சொந்த சரக்கு இல்லாமல் மற்ற படைப்பாளிகளின் கதைக்கருவை ரீமேக் செய்தோ அல்லது காப்பியடித்தோ திரைப்படம் உருவாக்குவது இன்றைய இயக்குனர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. ஒரு நல்ல படைப்பாளி என்பவன் தன்னுடைய உணர்வுகளை சிந்தனைகளை தனது படைப்பாற்ற திறனை வெளிப்படுத்துவது தான் ஒரு கலைக்குரிய அங்கீகாரமாக இருக்கும்.
ஆனால் இன்றைய நட்சத்திர இயக்குனர்கள் என்று புகழப்படும் பலரும் ஜெராக்ஸ் கடை ஓனர்களாக தான் இருக்கிறார்கள். யாரோ சிந்தித்து கற்பனை செய்து உருவாக்கிய ஒரு கதையை அப்படியே நகல் எடுத்து அதே கேரக்டர்களில் நடிகர்களை நடிக்க வைத்து திரைப்படமாக்கி ரசிகர்களுக்கு தருகின்றனர் இது இப்போது தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இது ஒரு முழுமையான காதல் கதை. வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் இந்த படத்தை மணிரத்னம் எடுக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கிடையே இந்த படம் கிரேஸ் ஸ்டுப்பிட் லவ் என்ற படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.
இந்த படம் கடந்த 2011ம் ஆண்டில் வெளியானது. க்ளென் பிகாரா ஜான் ரெகுவா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஸ்டீவ் கார்ல் ரியன் காஸ்லிங் ஜூலியன் மூர் எம்மா ஸ்டோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடுத்தர வயதான ஹீரோவிடம் அவரது மனைவி விவாகரத்து கேட்கிறார். அப்போது ஒரு இளைஞன் உதவியால் தன் தவறுகளை அவர் சரி செய்கிறார்.
தம்பதிக்கு விவாகரத்து கிடைத்ததா? இருவரும் இணைந்தார்களா என்பதே கதை. அந்த நடுத்தர வயது நபராக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரது மனைவியாக சாய்பல்லவி நடிக்கிறார். அந்த இளைஞர் கேரக்டரில் நடிப்பது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஆனால் இது உண்மையிலேயே கிரேஸ் ஸ்டுப்பிட் லவ் படத்தின் கதைதானா அல்லது வேறு கதையா என்பதை இன்னும் மணிரத்னம் தரப்பில் உறுதி செய்யவில்லை. ஆனால் ஏற்கனவே இவர் பல படங்களை காப்பியடித்து தான் பல ஹிட் படங்களை கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.





