- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயங்கள்தான், தி கோட் இசை வௌியீட்டு விழாவை விஜய் தவிர்க்க காரணமா? வெளிச்சத்துக்கு...

அந்த விஷயங்கள்தான், தி கோட் இசை வௌியீட்டு விழாவை விஜய் தவிர்க்க காரணமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை – ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் வருகிற 5ம் தேதி தி கோட் படம் ரிலீஸாகிறது. இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், 1000 கோடி ரூபாய் வசூலை இலக்காக கொண்டிருக்கிறது. இதுவரை ப்ரீ புக்கிங் ரூ. 25 கோடியை கடந்துள்ள நிலையில், 100 கோடி ரூபாயை எட்டி விடும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபு, விஜயிடம் தி கோட் படத்தின் கதையை சொன்ன போது, இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து வெங்கட்பிரபு எதுவுமே சொல்லவில்லை. ஆனால் விஜயே வெங்கட்பிரபு – யுவன் சங்கர் ராஜா காம்பினேஷன் சூப்பராக இருக்குமே என்று சொன்னதால்தான் யுவன் சங்கர் ராஜாவை தி கோட் படத்தில் புக் செய்ததாக வெங்கட்பிரபு ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் விஜய், வெங்கட்பிரபு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக தி கோட் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எதுவுமே சூப்பராக இல்லை. சுமார் ரகமாகவும் இல்லை. விஜய் படத்தின் பாடல்கள் என்றாலே ஒரு வைப் ரசிகர்கள் மத்தியில் ஏற்படும். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் எந்த ஒரு அதிர்வையும் ரசிகர்களுக்கு தரவில்லை.

இப்படி தி கோட் பட பாடல்களுக்கு கிடைத்த சுமாரான வரவேற்பை புரிந்துக்கொண்ட விஜய், இசை வௌியீட்டு விழா வைக்கும் அளவுக்கு பாடல்கள் பெரிய அளவில் இல்லை என்று புரிந்துக்கொண்டார். அதனால் முதல் காரணமாக இசை வெளியீட்டு விழாவை மறுத்துள்ளார். மேலும் லியோ இசை வெளியீட்டு விழா போல், கடைசி நேரத்தில் ஆளுங்கட்சி குறுக்கீட்டால் இந்த விழாவும் ரத்து செய்யப்பட்டால் அசிங்கமாகி விடும் என்றும் தவிர்த்திருக்கிறார்.

மேலும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் கட்சி பாடலையும் வெளியிட்டுள்ளார். இம்மாதம் 23ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற கிராமத்தில் தவெக கட்சியில் முதல் அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் நடிகர் விஜய் நிறைய விஷயங்களை பேச இருக்கிறார். அதில் குறிப்பாக அவர் அரசியல் இயக்கத்தை துவங்க என்ன காரணம், அரசியலில் அவரது எதிர்கால திட்டங்கள் என்ன, அரசியலில் அவரது கொள்கைகள், நிலைப்பாடுகள் என்ன என்பவை குறித்தும் பேச இருப்பதால், இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவதை தவிர்க்கவும் தி கோட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்ற காரணங்கள் தெரிய வந்துள்ளது.

சற்று முன்