- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் 2 நாள்… கோவாவில் 2 நாள் - நடிகர் சூர்யா பிறந்த நாளில் இப்படி...

சென்னையில் 2 நாள்… கோவாவில் 2 நாள் – நடிகர் சூர்யா பிறந்த நாளில் இப்படி ஒரு அதிரடியா? – இயக்குனர் வெங்கட்பிரபுவை சமீபத்தில் சூர்யா சந்தித்தாரா?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்றாலும் வெற்றிப் படம் என அறிவிக்கப்பட்டு, வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேசன் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கினார். இப்போது கருப்பு என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் சூர்யா, தனது தந்தை நடிகர் சிவக்குமார் மற்றும் தம்பி நடிகர் கார்த்தி ஆகியோருடன் சென்னை தி நகரில் வசித்து வந்தார். நடிகை ஜோதிகாவை திருமணம் செய்த பிறகும் தந்தை மற்றும் தம்பியுடன் கூட்டுக்குடும்பமாக தான் இருந்தனர். இதற்காக பிரமாண்டமாக வீடும் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து கட்டியுள்ளனர்.

- Advertisement -

ஆனால் நடிகை ஜோதிகாவின் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ளவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் மும்பையில் குடியேறுவதாக ஜோதிகா தரப்பில் கூறப்பட்டது. அதே போல் 3 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா, ஜோதிகா தம்பதி மும்பையில் சொந்தமாக பிளாட் வாங்கி பிள்கைளுடன் அங்கு குடியேறி விட்டனர்.

இந்நிலையில் தற்போது சென்னை ஈசிஆரில் நடிகர் சூர்யா, பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டி வருகிறார். மும்பையில் இருந்து நடிகர் சூர்யா ஜோதிகா சென்னை வரும்போது எல்லாம், தி நகரில் உள்ள தங்களது சொந்த வீட்டில் தங்காமல் நட்சத்திர ஓட்டலில் தங்கிக்கொண்டு இருந்தனர். இப்போது ஈசிஆரில் சொந்தமாகவே வீடு கட்டியுள்ளனர்.

- Advertisement -

வருகிற 23ம் தேதி நடிகர் சூர்யாவின் 50வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை ஈசிஆரில் வருகிற 19ம் தேதி 20ம் தேதி ஆகிய 2 தினங்களும் நடிகர் சூர்யா பார்ட்டி நடத்துகிறார். அதே போல் அதே நாட்களில் மும்பை நண்பர்கள், திரை நட்சத்திரங்கள், தெலுங்கு திரை பிரபலங்களுக்காக கோவாவிலும் சூர்யா பார்ட்டி நடத்துகிறார்.

தனது 50வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட விரும்பும் நடிகர் சூர்யா, இப்படி சென்னை கோவா 2 இடங்களில் பார்ட்டி நடத்துகிறார். வழக்கமாக இப்படி பார்ட்டி பண்ணுவதில் கோலிவுட்டில் பிரபலமானவர் இயக்குனர் வெங்கட்பிரபுதான் பெயர் வாங்கியவர். சமீபத்தில் அவரை நடிகர் சூர்யா சந்தித்தாரா, இப்படி 4 நாட்கள் தொடர்ந்து பார்ட்டி பண்ணுகிறாரே என ரசிகர்கள் பலரம் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்