- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் நடிகர் சியான் விக்ரம் திடீர் சந்திப்பு… விரைவில் அடுத்த படம் அறிவிப்பு வெளியாக...

இயக்குனர் ஷங்கர் நடிகர் சியான் விக்ரம் திடீர் சந்திப்பு… விரைவில் அடுத்த படம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஷங்கர், இதுவரை 30 ஆண்டுகளில் 15 படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். இதில் 2 நாயக் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்கள் மட்டும் முறையே இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி தமிழில் வெளியிடப்பட்டது. கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் என 2 படங்களுமே பெரிய பிளாப் படங்களாக இருந்தன.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய அந்நியன் ஐ படங்களில் நடித்தவர் சியான் விக்ரம். 2 படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற மாஸ் ஹிட் படங்கள்தான். இதில் ஐ படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்று சொன்னாலும் விக்ரம் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் வில்லனாக சுரேஷ்கோபி நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகர் சியான் விக்ரமுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே பெரிய வெற்றிப் படங்கள் இல்லை. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் சியான் விக்ரம் பிரதான கேரக்டரில் நடித்திருந்தாலும் இது மல்ட்டி ஸ்டார் படமாக கார்த்தி ஜெயம் ரவி சரத்குமார் பிரபு பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் தோல்வியடைந்தது.

கோப்ரா தங்கலான் வீரதீர சூரன் 2 என நடிகர் விக்ரம் பெரிய அளவில் எதிர்பார்த்த படங்கள் எதுவுமே சூப்பர் ஹிட் படங்களாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதுவும் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பு பாராட்டை பெற்றாலும் கதை திரைக்கதை காட்சிகள் கடும் விமர்சனத்தில் சிக்கி படத்தை டம்மி ஆக்கி விட்டது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் நடிகர் விக்ரம் இயக்குனர் ஷங்கர் ஏதேச்சையாக சந்தித்து கொண்டனர். அதிக நேரம் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கருக்கு 2 படங்கள் பெரிய தோல்வியை தந்து விட்டன. நடிகர் விக்ரமுக்கும் பெரிய வெற்றி படங்கள் சமீபகாலமாக இல்லை.

அதனால் நிச்சயமாக நடிகர் விக்ரம், இயக்குனர் ஷங்கர் சந்திப்பில் அடுத்த படம் குறித்து பேசியிருப்பார்கள். விக்ரமிடம் ஷங்கர் நிச்சயமாக ஒன்லைன் கதை சொல்லி இருப்பார். அதனால் இருவரும் விரைவில் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்