- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் நடித்த படை தலைவன் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு - கேப்டன் வரும் காட்சிகளில்...

விஜயகாந்த் நடித்த படை தலைவன் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு – கேப்டன் வரும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர். ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக நட்சத்திர நடிகராக இருந்தவர். தைரியம் துணிச்சலுக்கு பெயர் பெற்றவர். சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் எதையும் சாதிக்கும் வல்லமை மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தாராள மனம் கொண்டவர்.

துபாய் மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சியை நடத்தி பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த தென்னிந்திய நடிகர் சங்க கடனை அடைத்தவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ முதல் லைட் பாய் வரை எல்லோரும் ஒரே மாதிரியான உணவு என்பதை நடைமுறைப்படுத்தியவர். தனது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக மாற்றியவர்.

- Advertisement -

தேமுதிக அரசியல் இயக்க தலைவராகவும் தமிழக அரசியலில் விஜயகாந்த் பெரிய அளவில் வெற்றி பெற்றார். அவரது கட்சி சந்தித்த 2வது தேர்தலிலேயே தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர். உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி விஜயகாந்த் மறைந்துவிட்டார்.

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். ஏற்கனவே சகாப்தம் மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்த அவர் 3வது படமாக படை தலைவன் படத்தில் நடித்திருந்தார். இன்று அந்த படம் ரிலீஸ் ஆனது. முன்னதாக நேற்று மாலை மறைந்த விஜயகாந்தின் நெருக்கமான சினிமா நண்பர்கள், முக்கியத்துறை பிரபலங்கள் கேப்டன் குடும்ப உறுப்பினர்களுடன் படை தலைவன் படத்தின் பிரிமியர் ஷோ நடத்தப்பட்டது.

- Advertisement -

இதில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மூத்த மகன் விஜயபிரபாகரன் விஜயகாந்த் மைத்துனர் எல்கே சுதீஷ் நடிகர்கள் ராதாரவி சரத்குமார் இயக்குனர் ஆர்வி உதயகுமார் நடிகை அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படை தலைவன் படத்தை பார்த்தனர். இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விஜயகாந்த் கவுரவ வேடத்தில் வருகிறார்.

இந்த சிறப்பு காட்சியில் விஜயகாந்த் வரும் சீன்களில் கைதட்டல் விசில் பறந்தது. விஜயகாந்த் நடித்த நீ பொட்டு வைத்த தங்க குடம் பாடலும் படை தலைவன் படத்தில் இடம்பெற்றுள்ளது. படை தலைவன் படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஒரு யானைக்கும் ஹீரோவுக்குமான பாசமே படை தலைவன் படம். இன்று படை தலைவன் படம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பாசிட்டிவ் ஆன விமர்சனமும் நல்ல வரவேற்பும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்