- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் … ரஜினியை பற்றி சொன்ன கமெண்ட் - சீக்ரட்டை போட்டுடைத்த...

கூலி படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் … ரஜினியை பற்றி சொன்ன கமெண்ட் – சீக்ரட்டை போட்டுடைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் கூலி. கடந்த மார்ச் மாதமே படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மலையாள நடிகர் சவுபிர் சாஹிர் இந்தி நடிகர் அமீர்கான் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் உடன் 37 ஆண்டுகளுக்கு பிறகு கூலி படத்தில் சத்யராஜ் இணைந்து நடித்திருக்கிறார். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் மிஸ்டர் பாரத். இந்த படம் கடந்த 1987ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு சில கருத்து வேறுபாடுகள் மனக்கசப்புகள் காரணமாக இருவரும் படங்களில் இணைந்து நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, ரஜினியும் சத்யராஜூம் 36 37 ஆண்டுகளாக சேர்ந்து நடிக்கவில்லை. இந்த படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றே சத்யராஜை கூலி படத்தில் நடிக்க வைத்தேன். அப்போது ரஜினி சார் இல்லாமல் எடுக்கப்பட்ட சில காட்சிகளை அவருக்கு போட்டு காட்டினேன்.

- Advertisement -

இப்படி தான் சார் 10 நாட்களாக ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது. இதன்பிறகு படத்தின் தொடர்ச்சியை நீங்கள் பிடித்துக்கொண்டு அப்படியே பாலோ அப் செய்து பிக்கப் செய்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன். அதை பார்த்துவிட்டு நடிகர் சத்யராஜ் என்னிடம் சொன்ன விஷயம் இதுதான்.

லோகேஷ், சிலர் ஹீரோவாக நடிப்பார்கள். ஹீரோ மாதிரியே நடிப்பாங்க. வரும்போது ஹீரோ மாதிரி வருவாங்க. ஒரு மனுஷன் எப்படி ஹீரோவாகவே வாழ முடியும் என்றால் அது ரஜினி சார்தான். அவர் சொன்ன பிறகு யோசித்த பார்த்த போது எனக்கும் அப்படியே தோன்றியது. அவர் நடந்து வர்றது பேசறது போறது எல்லாமே கவனிச்சா அவர் ரியலாகவே ஹீரோ என்பது தெரியும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்