- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவில்; சர்ச்சையை கிளப்பிய அந்த விஷயம் - என்னப்பா இது...

நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவில்; சர்ச்சையை கிளப்பிய அந்த விஷயம் – என்னப்பா இது ஆரம்பத்திலேயே இப்படி ஒரு பிரச்னையா?

- Advertisement -

நடிகர் விஜய் சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கொரட்டூரில் தனக்கு சொந்தமான இடத்தில் சீரடி சாய்பாபா கோவில் ஒன்றை புதிதாக கட்டியுள்ளார். மிகப் பிரமாண்டமாக கட்டியுள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றனர். தனது அம்மா ஷோபா சந்திரசேகர் தீவிரமான சீரடி சாய்பாபா பக்தர் என்ற நிலையில், அம்மாவுக்காக இந்த கோவிலை கட்டி முடித்து இருக்கிறார் நடிகர் விஜய்.

சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாய்பாபா கோவிலுக்கு நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அவரை கோவில் வாசலில் நின்று வரவேற்ற விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உடனிருந்து கோவிலை அவருக்கு சுற்றி காட்டி இருக்கிறார். ராகவா லாரன்ஸக்கு கோவிலில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஜோசப் விஜய் என நடிகர் விஜயை முன்பு அழைத்த நிலையில், அவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய பிறகு, தனக்கு இந்து மதம் மீதும் ஆர்வம் உள்ளது போல் காட்டிக் கொள்ள, அதன் ஒரு வெளிப்பாடாக இப்படி சீரடி சாய்பாபா கோவிலை கட்டி தன்னை மதங்களை அப்பாற்பட்டவராக மக்கள் மத்தியில் தன்னை காட்டிக் கொள்வதாகவும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

ஆனால் விஜயை பொருத்தவரை இதுவரை எந்த ஒரு இடத்திலும் தன்னை கிறிஸ்தவராக அவர் காட்டிக் கொண்டதோ, அல்லது கிறிஸ்தவ மதம் குறித்து பெருமை பேசியோ, அவர் தனது படங்களில் நடித்ததும் இல்லை. பொதுவான விஷயங்களில் மதம் குறித்த விஷயங்களை அவர் பேசியதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், மீடியாக்களும் உள்ளே சென்று புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷோபா சந்திரசேகர் மற்றும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கோவிலில் இருந்த போது வீடியோக்களும் புகைப்படங்களும் அதிக அளவில் எடுக்கப்பட்டன.

இதேபோல் இனி மற்ற நடிகர்கள் வந்தாலும் இது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி என்றால் நடிகர்களுக்கு ஒரு விதிமுறை, பொதுமக்களுக்கு ஒரு விதிமுறையா என்ற ஒரு கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது. சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க அனுமதி இல்லை என்றால், அங்கு அனைவருக்கும் அது பொதுவான விதிமுறையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்