- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன கொடும சார் இது? கருப்பு படம் ரிலீஸ் தேதியை முடிவு செஞ்சதும் இத்தனை சிக்கல்...

என்ன கொடும சார் இது? கருப்பு படம் ரிலீஸ் தேதியை முடிவு செஞ்சதும் இத்தனை சிக்கல் வரிசையா வருதே…? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

இப்போதெல்லாம் சொந்தமாக படம் தயாரிப்பது படத்தை இயக்குவது படத்தில் நடிப்பதை விட பெரிய சிக்கலான விஷயமாக தமிழ் சினிமாவில் இருப்பது படத்தை எந்த நாளில் ரிலீஸ் செய்வது என்பதுதான். முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் மற்ற தமிழ் படங்கள் எதுவும் வருகிறதா என்றுதான் விசாரித்து பார்ப்பார்கள்.

ஆனால் பான் இந்தியா படங்கள் உருவாக துவங்கிய பிறகு மற்ற மொழி படங்கள் ரிலீஸ்சும் தமிழ் படங்களுக்கு ஆப்பு வைத்து விடுகின்றன. ஒரு படம் எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் தியேட்டர்கள் போதிய எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடி கிடைக்க வேண்டும். மற்ற படங்களின் வருகையால் இடையூறும் ஏற்படக் கூடாது. அப்போதுதான் அந்த படம் வசூலிலும் ஜெயிக்க முடியும்.

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். கடந்த மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் வெளியானது. அதன்பிறகு இதுவரை 8 மாதங்களாக சூர்யா நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம் உருவானது. இந்த படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடித்திருந்தார். திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் கருப்பு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால் கடந்த தீபாவளிக்கே கருப்பு படம் வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசப்பட்ட நிலையில் படம் வெளிவரவில்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போதைய வெளியான லேட்டஸ்ட் தகவலின்படி வருகிற மார்ச் 19ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் அறிவிக்கவும் படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் கருப்பு படக்குழுவுக்கு வரிசையாக சில தகவல்கள் வெளியாகி பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

அதாவது வருகிற மார்ச் 19ம் தேதி கருப்பு படம் ரிலீஸ் செய்யப்படும் அதே நாளில் தெலுங்கில் நடிகர் நானி நடித்த ஒரு படமும், கன்னட நடிகர் யஷ் நடித்த ஒரு படமும் அதே போல் தெலுங்கில் ராம்சரண் நடித்த ஒரு படமும் வெளியாக உள்ளது. இதுமட்டுமின்றி வருகிற மார்ச் 19ம் தேதி இந்தி படம் ஒன்றும் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவை எல்லாமே பான் இந்தியா படங்கள் என்பதால் தமிழ்நாட்டிலும் இந்த படம் வெளியாகும் நிலையில் இப்போது இடியாப்ப சிக்கலில் சிக்கிய நிலையில் கருப்பு படக்குழுவினர் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்