வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்த நடிகர் விஜய், இப்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் படத்தை தயாரிக்கிறது. சத்யன் குரியன் ஒளிப்பதிவாளராக காட்சிகளை படமாக்கி வருகிறார்.
பீஸ்ட் படத்துக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடித்து வருகிறார். அனிமல் படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான வில்லனாக நடித்து வரும் பாபி தியோல், தளபதி 69 படத்திலும் வில்லன் கேரக்டரில் கமிட் ஆகியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பிரியாமணி கௌதம் மேனன் நரேன் வரலட்சுமி சரத்குமார் மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதுவரை 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகை அல்லது குடியரசு தின நாளில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தளபதி படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இங்க நான்தான் கிங்கு படத்தை அடுத்து, நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸ் 2 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சொகுசு கப்பல் ஒன்றில் நடக்கின்ற கதை இது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் சந்தானத்துடன் நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன் சாய்தீனா முனீஸ்காந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சென்னை பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது இந்த படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் இப்போது நடித்துவரும் தளபதி 69 படத்தில் நடிகர் சந்தானமும் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்படி ஒரு தகவல் எப்படி வெளியானது என்று ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் தலைவா படத்தில் விஜயுடன் சந்தானம் இணைந்து காமெடி ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





