- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் அனிருத் திருமணம் எப்போது? - மணப்பெண் அவர்தான், சூப்பர் ஸ்டாரே சம்பந்தம் பேசினாரா? சுடச்சுட...

இசையமைப்பாளர் அனிருத் திருமணம் எப்போது? – மணப்பெண் அவர்தான், சூப்பர் ஸ்டாரே சம்பந்தம் பேசினாரா? சுடச்சுட வந்த அப்டேட் இதுதான்!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் திருமண வயது கடந்தும் முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். எப்போது அவருக்கு திருமணம் என்று இசை ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், மிக விரைவில் அனிருத் திருமணம் நடக்க உள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

சன் நெட்வொர்க் மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக காதல் இருப்பதாக ஏற்கனவே தகவல் பரவியது. அவர்கள் இருவரும் லாஸ் வேகாஸில் ஒன்றாக சுற்றியதாகவும் அங்கு டின்னர் டேட்டிங் சென்றதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

- Advertisement -

பொதுவாக இத்தகைய தகவல்களை அனிருத் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார். ஆனால் இந்த தகவல் வெளியான போது மட்டும், கொஞ்சம் ரூமர்ஸ் பரப்புவதை நிறுத்துங்க பாஸ் என்று அவரே டிவீட் செய்து இருந்தார். ஆனால் இப்போதும் அவரது திருமண விஷயத்தில் காவ்யா மாறன் பெயர் அடிபடுகிறது. ஆனால் அனிருத் கடுமையாக எதிர்க்கவில்லை.

கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பல பெரிய பட்ஜெட் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் ஜெயிலர் 2 படம் முதல், அடுத்தடுத்து வரவிருக்கும் பல பெரிய பட்ஜெட் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்பதால் தொழில்முறை உறவு அவர்களுக்குள் தொடர்ந்து நீடிக்கிறது.

- Advertisement -

இந்த தொழில்முறை உறவு இப்போது குடும்ப உறவாகவும் மாறப்போகிறது.அனிருத் காவ்யா மாறன் திருமணம் சார்ந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இந்த ஜோடியின் திருமண விஷயத்தை இரு தரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சம்மதம் வாங்கியிருக்கிறார். இந்த சம்பந்தம் உருவாகவே காரணம் ரஜினிகாந்த் தான் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அண்ணன் தான் ரவிச்சந்தர். அதாவது லதாவின் சொந்த அண்ணன். அதாவது ரஜினிக்கு மச்சினன் மகன் அனிருத். அதனால் நெருங்கிய உறவினர் ரஜினியே இதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். நீண்ட காலமாக கலாநிதி மாறனுக்கும் ரஜினிக்கும் இடையே நெருக்கமான நட்பும் உள்ளது. எனவே இரண்டு பெரிய குடும்பங்களையும் இணைக்க ரஜினியே இதில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்