- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவுடன் மோத போகும் சசிகுமார்... திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு... பரபரக்கும் கோலிவுட் திரை உலகம்...

சூர்யாவுடன் மோத போகும் சசிகுமார்… திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு… பரபரக்கும் கோலிவுட் திரை உலகம்…

- Advertisement -

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கிறது ரெட்ரோ திரைப்படம். இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, love laughter war என்பதை போஸ்டரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குனர். பிறகு சூட்டிங் பணிகள் அந்தமானில் தொடங்கின. கிட்டத்தட்ட நான்கே மாதங்களில் விறுவிறுப்பாக நடந்து அத்தனை பணிகளும் முடிவு பெற்றுள்ளன.

இதில் சூர்யாவுக்கு இரண்டு விதமான கெட்டப்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். ஒன்று பங்க் வைத்தபடி மீசையை முறுக்கி விடும் ரவுடி கதாபாத்திரம். மற்றொன்று ஆயுத எழுத்து திரைப்படத்தில் வரும் மைக்கேல் கதாபாத்திரம் கொண்ட தோற்றத்தையும் அளித்திருக்கிறார். பூஜா ஹெக்டே இதில் கதாநாயகியாக வருகிறார்.

ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் பலரையும் கவர்ந்தது. அதில் சூர்யா கேங்ஸ்டர் ஆக நடித்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டது. முக்கியமாக தனது காதலுக்காக அனைத்து வம்புகளையும் விடுவது போன்று வசனங்கள் அதில் இடம்பெற்று இருந்தன.

அவர் பூஜாவிடம், அத்தனை அடிதடிகளையும் விடுவதாக ரிசொல்யூஷன் எடுக்கும் வசனங்களை இங்கு பலர் ஸ்டேட்டஸ் ஆக வைத்தனர். தொடர்ந்து அண்மையில் வெளியான கனிமா பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. சந்தோஷ் நாராயணன் இசையில் பூஜாவின் நடன அசைவுகள் கவனத்தை ஈர்த்தன.

இப்படிப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் வருமே ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் அதே தேதியில் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

கொரோனாவுக்குப் பிறகு இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை ஏற்படுத்தியிருந்த சூழலில், அதனால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் குடும்பம் கடன் தொல்லையிலிருந்து தப்பி வேறு ஒரு இடத்திற்கு இடம்பெயர்வது போன்று இதன் கதை எழுதப்பட்டிருக்கிறதாம். அண்மையில் வெளியான இதன் டீசர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த திரைப்படமும் மே ஒன்றாம் தேதி வெளியாவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சற்று முன்