நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த சூர்யாவுக்கு பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. ஆனால் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே பாலா இயக்கிய நந்தா ஆகிய படங்கள் அவரை நல்ல நாயகனாக சினிமாவில் உருவாக்கியது.
தொடர்ந்து காக்க காக்க கஜினி வாரணம் ஆயிரம் சில்லுனு ஒரு காதல் பிரண்ட்ஸ் ஏழாம் அறிவு பேரழகன் சிங்கம் சிங்கம் 2 வேல் போன்ற படங்களால் சூர்யா முன்னணி நாயகனாக மாறினார். ஆனால் அதற்கு பின் சூர்யா நடிப்பில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் சூர்யா நடித்த ஜெய்பீம் சூரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே ஓடிடியில் நேரடியாக வெளியாகி வணிக ரீதியாக வெற்றியடைந்தன. ஆனால் தியேட்டரில் வெளியான அஞ்சான் காப்பான் 24 பசங்க 2 சிங்கம் 3 மாசு என்கிற மாசிலாமணி தானா சேர்ந்த கூட்டம் எதற்கும் துணிந்தவன் என்ஜிகே மற்றும் கங்குவா வரை 10 படங்களும் படுதோல்வியை சந்தித்தன.
இந்த சூழலில் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஜெயராம் நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது.
ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. சிலர் கங்குவா 2ம் பாகம் போல உள்ளது என்று கூறினர். ரசிகர்களே போனால் போகட்டும் என்று நினைத்து சூர்யாவை வரவேற்க நினைத்தாலும் அவரால் இனி கம்பேக் தர முடியாது போலிருக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தனர். கதை திரைக்கதை சரியாக இல்லாத போது முழு எபோர்ட் போட்டு சூர்யா நடித்தும் என்ன பலன் என்று அவரது ரசிகர்களே விமர்சிக்கின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் படங்களில் வழக்கமான ஒரு படம்தான். இதில் கொண்டாடும் அளவுக்கு எந்த வித்யாசமும் இல்லை. கதையில் எந்த சுவாரசியமும் இல்லை என்றும் விமர்சனங்கள் பரவலாக உள்ளன. இந்நிலையில் ரெட்ரோ படம் 3 நாட்களில் ரூ. 68 கோடி வசூலித்திருக்கிறது. விரைவில் ரூ. 100 கோடியை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் விமர்சன ரீதியாக இதுவும் சூர்யாவுக்கு ஒரு தோல்வி படம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.





