- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தில், தன்னைத்தானே அசிங்கமாக திட்டிக்கொண்ட விஜய் - ஏம்பா, இத்தனை பேர் கூட இருந்தும்...

லியோ படத்தில், தன்னைத்தானே அசிங்கமாக திட்டிக்கொண்ட விஜய் – ஏம்பா, இத்தனை பேர் கூட இருந்தும் இதைக்கூட கவனிக்கலையேப்பா

- Advertisement -

கடந்த 19ம் தேதி வெளியான லியோ படம், நல்ல படம், மோசமான படம் என்ற இரண்டு விதமான கலவையான விமர்சனங்களுடன் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. பர்ஸ்ட் ஆப் சூப்பர் எனவும், செகண்ட் ஆப் மெகா சொதப்பல் எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பாதி படத்துக்கு பிறகு, நடிகர் விஜய் கதையில் குறுக்கிட்டதால்தான் இத்தனை குழப்பம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் மனங்களில், மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது, விஜய் படத்தில் விஜயே தன்னை கேவலமாக திட்டிக்கொள்ள சம்மதித்து இருக்கிறாரே, கதைப்படியே என்றாலும், இதைக்கூட படத்தின் இயக்குநர், உதவி இயக்குநர்கள், படக்குழுவினர் என யாருமே, யோசிக்கவில்லையா என்பதே மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

லியோ படம் ரிலீஸ் ஆகும், பத்து நாட்களுக்கு முன்பே லியோ படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில், விஜய் திரிஷாவிடம் பேசுவது போன்ற ஒரு வசனம் இடம்பெற்றது. அதில், என்னை மாதிரியே எவனோ ஒரு … இருப்பதாக, என்னை டார்ச்சர் செய்தால், நான் என்னடி பண்ணுவேன், என விஜய், திரிஷாவிடம் பேசி இருப்பார். இது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

லியோ டிரெய்லரை பார்த்த பலரும், படத்தில் இன்னொரு கேரக்டரில் வரும் மோசமான லியோ விஜயை, பார்த்திபன் என்ற நல்லவர் விஜய் திட்டுகிறார் என்று நினைத்தனர். இதற்கு சப்பைக்கட்டும் விதமாக, இது விஜய் பேசும் வசனம் அல்ல. பாதிக்கப்பட்ட அந்த படத்தின் கேரக்டர் பார்த்திபன் பேசும் வசனம் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால், படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இதில் மிகப்பெரிய அதிர்ச்சிதான் காத்திருந்தது. அதாவது, படத்தில் பார்த்திபன், லியோ வேறு வேறு கேரக்டர்களாக நடித்து இருந்தாலும், இருவரும் ஒருவரே தான். அதாவது, லியோ தான் பார்த்திபனாக நடித்து அனைவரையும் ஏமாற்றுகிறார் என்பதை படத்தின் கிளைமாக்ஸ் புரிய வைத்துவிடுகிறது.

அப்படி என்றால், படத்தின் ஹீரோவான விஜய், தன்னையே மிக அசிங்கமாக அவரே திட்டிக்கொள்ளும் இந்த வார்த்தை அவசியம்தானா, அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் விதமான ஒரு வார்த்தையை, விஜய் தன்னைத்தானே அசிங்கமாக திட்டிக்கொள்வது சரிதானா, லியோவும் அவரே, பார்த்திபனும் அவரே என்ற நிலையில், கேரக்டர்படி பார்த்தாலும் இது எவ்வளவு பெரிய அபத்தமான வசனம் என, ரசிகர்கள் பலரும் திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்