- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது அவங்க ராசியில்லாத நடிகையா? பிரியா பவானி ஷங்கர் குறித்த கேள்விக்கு பதிலளித்த - ரிஷிகாந்த்

என்னது அவங்க ராசியில்லாத நடிகையா? பிரியா பவானி ஷங்கர் குறித்த கேள்விக்கு பதிலளித்த – ரிஷிகாந்த்

- Advertisement -

கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிய “இந்தியன் 2” படமானது தற்போது ஒரு வாரத்தை நிறைவு செய்ய காத்திருக்கிறது. எதிர்பார்த்த அளவு இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என்றாலும் வசூல் ரீதியாக ஓரளவு சிறப்பாகவே சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், ரிஷிகாந்த், ஜெகன், மனோபாலா, நெடுமுடி வேணு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தை நெருங்கியுள்ள வேளையில் “இந்தியன் 2” படத்தில் நடித்த நடிகரான ரிஷிகாந்த் தற்போது பிரத்யேக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அதில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்தியன் 2 படத்திற்கான அறிவிப்பு வரும் போது அனைவரையும் போல நானும் முயற்சி செய்தேன்.

- Advertisement -

என்னை டெஸ்ட் செய்த சங்கர் சார் என்னிடம் சில கேள்விகளை கேட்டு பின்னர் ஓகே சொல்லிவிட்டார். அதன் பிறகு நான் இந்த படத்தின் இரண்டாம் நாள் படப்பிடிப்பில் இருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டேன். படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களில் அனுபவம் குறைவான ஒரு நபர் நான் தான்.

இந்த படத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன். கமலஹாசன் சார் ஒரு ஷாட்டினை மிகவும் சிறப்பாக கொண்டு வருவதற்காக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். இன்றைய சினிமாவில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பமும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அதோடு இன்று ரிலீஸ் ஆகி எத்தனை படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பது குறித்து அனைத்து தகவலையும் அவர் தெரிந்து வைத்துள்ளார்.

- Advertisement -

இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நபர் இப்படி அனைத்தையும் தெரிந்து கொண்டு வைத்துள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கூறினார். மேலும் ராசி இல்லாத நடிகையா? ப்ரியா பவானி சங்கர் என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஷிகாந்த் கூறுகையில் : இது என்ன என்று எனக்கு புரியவில்லை. ஒரு சிறந்த நடிகை. அவர் என்னிடம் எப்போதுமே அன்பாக நடந்து கொள்வார்.

எனக்கும் அவர் மீது அன்பும் மதிப்பும் உள்ளது. இது போன்ற கமெண்ட்களில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அவர் சிறப்பாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் தொடர்ச்சியாக வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது என்று ரிஷிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்