- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா படத்தை தொடர்ந்து சிம்புவுடனும் கைகோர்த்த இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர்... பாராட்டு மழையில்...

சூர்யா படத்தை தொடர்ந்து சிம்புவுடனும் கைகோர்த்த இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர்… பாராட்டு மழையில் வளரும் நட்சத்திரம்…

- Advertisement -

தமிழ் சினிமாவை தாண்டி தற்போது அனைவராலும் உற்று நோக்கி பார்க்கப்படும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். யூடியூபில் பலரும் முணுமுணுக்கும் பாடல்களை கொடுத்து பிரபலம் அடைந்தவர் இவர். குறிப்பாக கட்சி சேரா, ஆச கூட ஆகிய பாடல்கள் சாய் அபயங்கரின் குரல் மற்றும் இசையில் தான் உருவாகின. இப்படி தொடர்ந்து ஹிட் பாடல்களால் பலரது பார்வையும் அவர் பக்கம் திரும்பியது.

திரைப்பட பின்னணி பாடகர்கள் திப்பு ஹரிணி தம்பதியின் மகன் தான் இவர். ஆரம்பத்தில் இருந்தே இசை கற்றுக் கொண்டு வந்த அவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இளம் இசையமைப்பாளர்களில் பெரிதாக கொடி கட்டி பறப்பவர் அனிருத்.

- Advertisement -

அவருக்கு அடுத்தபடியாக சாய் அபயங்கர் தற்போது வருவார் என்று பலரும் ஆருடம் தெரிவித்து வருகிறார்கள். இவருக்கு முதல் முதலில் வெள்ளி திரையில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். அவரது தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ராகவா லாரன்ஸ் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல் சி யு வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் தாமதமான நிலையில் தற்போது மீண்டும் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யா படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார், சாய் அபயங்கர்.

- Advertisement -

சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்திற்காக ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்திருக்கிறார். முதலில் இதற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் அதிலிருந்து விடுபட, தற்போது சாய் அதில் பணியாற்றி வருகிறார். இதேபோல் அட்லி அல்லு அர்ஜுன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் திரைப்படத்திற்கும் சாய் தான் இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தற்போது சிம்புவின் 49 ஆவது திரைப்படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சாய். இதற்கான அறிவிப்பை சிம்புவை வெளியிட்டுள்ளார். பார்க்கிங் திரைப்படத்தை எடுத்த ராம்குமார் இதனை இயக்குகிறார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்