நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பா விஜயை போல சினிமாவில் நடிகராக விரும்பாமல் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசகேர் போல திரைப்பட இயக்குனராகி விட்டார். ஆனால் முதல்வராக உள்ள விஜயிடம் அவரது மனைவி சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா ஆகியோர் தொடர்பு இல்லாமல் விலகி வாழ்கின்றனர்.
இதற்கிடையே சங்கீதா விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். இந்த வழக்கு 3ம் முறையாக நேற்று செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் அடுத்து வருகிற ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனைவி மட்டுமின்றி பிள்ளைகளும் விஜயை விட்டு விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் கட்சி துவங்கிய போதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போதும் இப்போது தமிழக முதல்வரான பிறகும் செய்தியாளர்கள் சந்திப்பை கட்டாயமாக தவிர்த்து வருகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற போதும் செய்தியாளர்கள் விஜய் சார் சிஎம் சார் என அழைத்தும் அந்த சந்திப்பை கட்டாயமாக தவிர்த்து விட்டு காரில் ஏறிச் சென்ற வீடியோ வைரலானது.
இப்போது விஜய் மகன் சஞ்சய்க்கும் அதே போல ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அவர் இயக்கிய சிக்மா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் பணிகளில் அவர் ஈடுபட வேண்டும். குறிப்பாக செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்து பேச வேண்டும். நேர்காணலில் சிக்மா படத்தை பற்றிய அனுபவங்களை பகிர வேண்டும்.
அப்போதுதான் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனமும் ஒரு வைப்பும் கிடைக்கும். அந்த ஹைப் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும். ஆனால் சிக்மா பட இயக்குனராக ஜேசன் சஞ்சய் பிரஸ் மீட்டில் செய்தியாளர்களை சந்தித்தால் அவர்கள் நிச்சயமாக முதல்வர் விஜய் குறித்தும் குடும்ப விவாகரங்கள் குறித்து கேள்வி கேட்பார்கள்.
அறிமுக இயக்குனர் என்ற முறையில் அவரது முதல் படத்தை பற்றி பேச வேண்டிய சூழலில் தனது குடும்பம் பெற்றோர் குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்படும். இது நிச்சயமாக பெரிய அளவில் அவருக்கு மனரீதியாக பாதிப்பை தரும். அத்துடன் அவரது பேச்சு கருத்துகள் இணையத்தில் வைரலாகும். ரசிகர்கள் மத்தியில் அது சர்ச்சையாகவும் கடும் விமர்சனமாகவும் மாறவும் வாய்ப்புள்ளது என்பதால் சிக்மா படக்குழுவினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.





