- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்தை ரிலீஸ் பண்ணினா, எனக்கு இருக்கற கொஞ்சநஞ்ச பேரும் கெட்டு போயிரும் - இப்படி...

இந்த படத்தை ரிலீஸ் பண்ணினா, எனக்கு இருக்கற கொஞ்சநஞ்ச பேரும் கெட்டு போயிரும் – இப்படி தயாரிப்பாளரிடம் கெஞ்சினாரா ஆர்ஜே பாலாஜி?

- Advertisement -

நடிகர் ஆர்ஜே பாலாஜி, படபட என மடை திறந்த வெள்ளம்போல பேசி மற்றவர்களின் மனம் கவர்ந்தவர். ஒரு ரேடியோ ஜாக்கியாக தன் வாழ்க்கையை துவங்கி, மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். கிரிக்கெட் போட்டிகளில், வீரர்களை சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளுவதில் வல்லவர்.

மீடியாவில் பிஸியாக இருந்த ஆர்ஜே பாலாஜி, சினிமா நடிகராக ஒருகட்டத்தில் மாறினார். முதலில் கதாநாயகனுடன் வழக்கம்போல வரும் காமெடி நண்பராக தான் பல படங்களில் ஆர்ஜே பாலாஜி நடித்தார். இவரது வாய் துடுக்கான பேச்சுதான் இவரை சட்டென அடையாளப்படுத்தி விடுகிறது.

- Advertisement -

அந்த வகையில், படங்களில் நடித்த போதும் சக நடிகர்களை, அங்கு நடக்கும் சம்பவங்களை கலாய்த்து, வாய் துடுக்காக பேசி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுபவராக இருந்தார். நடிகராக இருந்த ஆர்ஜே பாலாஜி ஹீரோவாகவும் நடித்த துவங்கினார்.

இவர் நடித்த எல்கேஜி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. அடுத்து நயன்தாராவை அம்மன் கேரக்டரில் மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். பெரிய ஹிட் ஆனது. தொடர்ந்து வீட்ல விசேஷம் படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

- Advertisement -

இதையடுத்து இயக்குநர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்தார். துவக்கத்தில் இருந்தே இயக்குநருக்கும், இவருக்கும் ஒத்துப்போகவே இல்லை. சண்டைக்கோழிகளாக இருவரும் படப்பிடிப்பு தளத்தில் முட்டி மோதிக்கொண்ட இவர்களை தடுத்து நிறுத்தி பஞ்சாயத்து செய்வதே வேல்ஸ் படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு ஒரு கட்டத்தில் பெரிய தலைவலியாக இருந்தது.

இந்த படத்தின் முதல் காப்பியை பார்த்த ஆர்ஜே பாலாஜி, தயவு செய்து இந்த படத்தை வெளியே விட்டுடாதீங்க. அப்படியே டிராப் பண்ணிடுங்க. இந்த படம் வந்தா, நான் சேர்த்து வெச்சிருக்கிற கொஞ்ச நஞ்ச பேரும் கெட்டுப் போயிடும். இதுக்கு பதிலா, ஒரு படத்துக்கு கால்ஷீட் தர்றேன். அதுல பதிலுக்கு நடித்து தருகிறேன் என்று ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் கூறியிருக்கிறார். அந்த படம்தான் வரும் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை கலைஞர் டிவி ரூ.6 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. ஆனால் சமீபத்தில் பேசிய ஆர்ஜே பாலாஜி, சிங்கப்பூர் சலூன் படத்தை மிஸ் பண்ணாம பாருங்க என்று சொல்லியிருப்பதுதான் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்