எப்போதுமே சில ஹீரோக்கள் படத்தில் நடிக்க வேண்டும். சில இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் நடிகைகள் கூறுவார்கள். அந்த பட்டியலில் அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சிரஞ்சீவி சிவராஜ்குமார் உபேந்திரா போன்றவர்களின் பெயர்கள் கண்டிப்பாக இருக்கும்.
அதே போல இயக்குனர்களில் பாரதிராஜா கே பாலசந்தர் பாலு மகேந்திரா மகேந்திரன் ராஜமௌலி ஷங்கர் வெற்றிமாறன் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களுடன் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். அவர்கள் இயக்கத்தில் நடிப்பதே பெரிய விஷயம் என்றும் நடிகர் நடிகைகள் பலர் கூறுவது வழக்கம்தான்.
ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஒரு பிரபல நடிகையே இப்படி ஒரு ஆசையை கூறி தன் விருப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். அவர் நடிகை ரோஜா. தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர். நடிகர் கமல் தவிர மற்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்துடன் வீரா மற்றும் உழைப்பாளி ஆகிய 2 படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரோஜா. அதே போல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் முரளி சரத்குமார் பிரபுதேவா என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்தவர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரோஜா கூறியதாவது, மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிப்பேன். யாரை கேட்டாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள். என்னுடைய ஆசையும் அதுதான். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
நான் சினிமாவுக்கு நடிக்க வருவதற்கு முன்பே அவரது ரோஜா படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இல்லை என்றால் ரோஜா படத்தில் நான்தான் நாயகியாக இருந்திருப்பேன். அது மிகவும் சந்தோஷமாக எனக்கு இருந்திருக்கும். மணிரத்னம் படத்தில் ஒரு சின்ன ரோலிலாவது நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





