- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படம் குறித்து வயித்தெரிச்சலை வெளிப்படுத்திய நடிகர் சித்தார்த், கூட்டம் வந்தால் அது...

புஷ்பா 2 படம் குறித்து வயித்தெரிச்சலை வெளிப்படுத்திய நடிகர் சித்தார்த், கூட்டம் வந்தால் அது தரமான படமாகி விடுமா என்றும் விமர்சனம் – என்னாச்சு ப்ரோ…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் சித்தார்த். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானார். தன்னுடைய மானசீக குரு என்று நடிகர் கமல்ஹாசனை மேடைதோறும் கூறிக்கொண்டிருப்பவர்.

சித்தார்த் நடித்த படங்களில் ஜிகர்தண்டா சிவப்பு மஞ்சள் பச்சை அருவம் சித்தா காதலில் சொதப்புவது எப்படி ஆயுத எழுத்து போன்ற சில படங்கள் பெரிய அளவில் ரசிக்ரகளிடம் வரவேற்பை பெற்றவை. குறிப்பாக சித்தா படம் உணர்வுபூர்வமான சிறந்த படமாக இருந்தது.

- Advertisement -

சமீபத்தில் சைக்கோ பட நாயகி அதிதியை சித்தார்த் காதல் திருமணம் செய்துக்கொண்டார். சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதே போல் அதிதிக்கும் இது 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் நடிப்பில் மிஸ் யூ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில், மிஸ் யூ பட பிரமோசனுக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சித்தார்த் கூறியதாவது, இந்தியாவில் கூட்டம் கூடுவது என்பது பெரிய விஷயமே இல்லை. ஒரு ஜேசிபி வண்டியை கொண்டு வந்து நிறுத்தினால் கூட அதை பார்ப்பதற்கு கூட்டம் கூடத்தான் செய்யும்.

- Advertisement -

பீகாரில் புஷ்பா 2 படம் பிரமோஷனுக்காக அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கு மார்க்கெட்டிங் தான் காரணம். கூட்டம் கூடுவதற்கும் தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி பார்த்தால் கூட்டம் கூடும் எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். இங்கு கரகோஷம் வாங்குவதெல்லாம் ரொம்ப ஈஸிங்க என்று சித்தார்த் பேசி இருக்கிறார்.

பொதுவாக தமிழ் படங்களுக்கு கிடைக்காத அபரிமிதமான வரவேற்பு மலையாளம், தெலுங்கு படங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த் நடித்திருந்த இந்தியன் 2 படம் மிக மோசமான தோல்வியடைந்தது. ஆனால் புஷ்பா 2 படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வயித்தெரிச்சலில்தான் இப்படி சித்தார்த் பேசுகிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்