தமிழ் சினிமாவில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் சில ஹீரோக்களுக்கு தோல்வி நடிகர் என்ற நெகட்டிவ் சென்டிமென்ட் வருவதில்லை. ஆனால் சில நாயகிகளுக்கு மட்டும் அவர் நடித்த படங்கள் தோல்வி என்றால் உடனே ராசியில்லாத நடிகை என்ற ஒரு பெயர் கோலிவுட்டில் வந்து விடுகிறது.
அப்படி ஒரு தோல்வி பட நடிகை சென்டிமென்டில் சிக்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். அவர் நடித்த யானை ருத்ரன் ரத்னம் போன்ற படங்கள் தோல்வியடைந்த போது அப்படிதான் அவரை சொன்னார்கள். ஆனால் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் டிமாண்டி காலனி 2 படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன.
இப்போது அந்த நெகட்டிவ் சென்டிமென்ட் இமேஜில் சிக்கியிருப்பவர் நடிகை ருக்மணி வசந்த். அவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ஏஸ் படமும் அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த மதராஸி படமும் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருக்கவில்லை. அதனால் அவருக்கும் ராசியில்லாத நடிகை என்ற பெயர் கோலிவுட்டில் உலா வருகிறது.
ஆனால் காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்த்த யாரும் அப்படி ருக்மணி வசந்தை சொல்ல முடியாது. ஏனென்றால் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்த படம் வசூலித்தது 800 கோடி ரூபாய். மேலும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பு என்பது வேற லெவலில் இருந்தது. ரிஷப் ஷெட்டிக்கு பிறகு அந்த படத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்தது ருக்மணி வசந்த் என்றால் அது மிகையல்ல.
இப்போது நடிகர் தனுஷ் கர படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி 55 படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 படத்தில் நடிக்க உள்ளார். மதுரையில் நடக்கும் கதைக்களம் என்பதால் தமிழரசன் பச்சமுத்து மதுரையில் ஆபீஸ் போட்டு ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளை வேகமாக செய்து வருகிறார்.
இந்நிலையில் டி56 படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை ருக்மணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிறகு அவர் நடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் அவர் ராசியில்லாத நடிகை என்ற நெகட்டிவ் சென்டிமென்ட் அல்ல. அவர் மற்ற படங்களில் நடிப்பதால் கால்ஷீட் இல்லை. ஏற்கனவே இயக்குனர் 1.5 ஆண்டுகளாக இந்த படத்துக்காக காத்திருந்த நிலையில், ருக்மணி வசந்த் கால்ஷீட்டுக்காக இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க முடியாது என்பதால் வேறு நாயகி தேடி வருவதாக தெரிய வந்துள்ளது.





