கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அந்த காலகட்டத்தில் சட்டம் அரசியல் காவல் துறை குறித்து தனது படங்களில் புரட்சிக்கரமான கருத்துகளை தைரியமாக சொன்னவர். அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் குறித்து பகிரங்கமாக விமர்சித்த படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்.
கடந்த 1973ம் ஆண்டில் ஏப்ரல் 26ம் தேதி பாடகி ஷோபாவை, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது மூத்த மகன் நடிகர் விஜய். இளைய மகள் வித்யா. சிறுவயதிலேயே வித்யா மறைந்து விட்டார். பாடகர் எஸ்என் சுரேந்தர் ஷோபாவின் சகோதரர், விஜய்க்கு தாய்மாமா என்பது கவனிக்கத்தக்கது.
இப்போதெல்லாம் நடிகர் நடிகைகள் சிலர் காதல் திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்று விடுகின்றனர். இது தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி மொழி சினிமா துறைகளிலும் அதிகமாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா – தனுஷ், ஆர்த்தி – ஜெயம் ரவி, சைந்தவி – ஜீவி பிரகாஷ்குமார் போன்ற சமீபத்திய விவாகரத்து வழக்குகள் பெரிய அளவில் ரசிகர்களை அதிருப்தியடைய செய்திருக்கின்றன. ஆனால் 52 ஆண்டுகள் கழிந்தும் எஸ்ஏசி – ஷோபா தம்பதி இன்றைய நட்சத்திர தம்பதிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் தனது மனைவி ஷோபா மீது இப்போதும் நிறைய அன்பு கொண்டிருக்கும் அவரது கணவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், திருமண நாளுக்கு தனது மனைவிக்கு அன்பு பரிசாக பிடபிள்யூ காரை வாங்கி பரிசளித்திருக்கிறார். தன் மனைவியை பிஎம்டபிள்யூ கார் ஷோ ரூமுக்கு நேரில் அழைத்துச் சென்ற எஸ்ஏசி, புதிய காரை வாங்கி தந்துள்ளார்.
அந்த ஷோரூமிலேயே கேக் வெட்டி கொண்டாடிய அந்த தம்பதி பிறகு எஸ்ஏ சந்திரசகேர், தன் மனைவியை அருகில் அமர வைத்து புதிய பிஎம்டபிள்யூ காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அந்த காட்சியை வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை காட்டியிருக்கிறார். அதில் வெட்டிங் அனிவர்சரி கிப்ட் பார் மை லவ் என்றும் அதில் எஸ்ஏசி குறிப்பிட்டு அசத்தியுள்ளார்.





