- Advertisement -
Homeபொழுதுபோக்குசமீபத்தில் நான் விரும்பி பார்த்த தமிழ் திரைப்படம் இதுதான்... கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பதிலால்...

சமீபத்தில் நான் விரும்பி பார்த்த தமிழ் திரைப்படம் இதுதான்… கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பதிலால் ஆச்சரியப்பட்ட கோலிவுட் திரையுலகம்…

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தனது அற்புதமான பேட்டிங் திறமையால், எதிரணியை ஆட்டம் காண வைத்தவர் சச்சின் டெண்டுல்கர். ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகிவிட்டாலே இந்திய அணி அவ்வளவுதான் முடிந்தது என்ற ஒரு பேச்சு எழும். சிலர், அந்த விளையாட்டை கூட பார்க்காமல் டிவியை ஆப் செய்து போன கதையும் உண்டு.

அந்த அளவுக்கு தனது திறமையான விளையாட்டால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவரது விளையாட்டு குறித்த பேச்சுகளை ரசிகர்கள் இன்னும் இணையத்தில் பதிவிட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படியான சூழலில் அண்மையில் சமூக வலைதளத்தில் சச்சின் டெண்டுல்கரிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது அவரிடம் சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு சச்சின் டெண்டுல்கர் கூறிய பதில் கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அதில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படங்களை பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில் 3 bhk திரைப்படத்தை தான் பார்த்ததாகவும், அதைக் கண்டு உற்சாகமடைந்ததாகவும் கூறி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் 3 bhk திரைப்படம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஸ்ரீ கணேஷ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீரா ரகுநாத் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம், ஒரு சொந்த வீடு வாங்குவதற்கு எப்படி எல்லாம் போராடுகிறது என்பதை உணர்வுபூர்வமாக ஸ்ரீ கணேஷ் அதில் காட்டி இருந்தார்.

அழுத்தமான காட்சிகள் ஏராளமாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக மீரா ரகுநாத்தின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. சரத்குமாரும் தனது பங்குக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திரையரங்குகளைத் தாண்டி ஓடிடி தளத்திலும் 3 bhk திரைப்படம் பாராட்டைப் பெற்றது. தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த திரைப்படத்தை புகழ்ந்து இருப்பது, படம் குறித்த உரையாடலை மீண்டும் தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்