நடிகர் சிவக்குமாரின் மகன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் 10 பேரில் ஒருவராக இருக்கிறார். துவக்கத்தில் கேமரா முன்பு நிற்கவும், நடிக்கவும் தெரியாமல் இருந்த சூர்யாவை ஒரு நல்ல நடிகராக, மௌனம் பேசியதே படத்தில் மாற்றினார் இயக்குனர் அமீர். அடுத்து, நந்தா படம் மூலம் அவரை ஹீரோ ஆக்கியவர் இயக்குனர் பாலா தான். இது சூர்யாவே நேர்காணலில் கூறியதுதான்.
ஆனால் சமீபகாலமாக இயக்குனர் சூர்யா, அவர் நடிக்க வேண்டிய மிக நல்ல படங்களை எல்லாம் அவராகவே ஏதேனும் சில காரணங்களால் இழந்து வருகிறார். குறிப்பாக வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆகி, ஒரு மாதம் நடித்த பிறகு வேண்டாம் என விலகி விட்டார். சூர்யா நடித்த கேரக்டரில், அருண் விஜய் பிறகு நடித்துள்ளார்.
அதே போல், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆன படம் புறநானூறு. இந்த படத்தில் நடிக்க, கதையில் பல மாற்றங்களை, திருத்தங்களை சூர்யா சொன்னதால், சுதா கொங்கரா அந்த படத்தையே டிராப் செய்துவிட்டார், இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை தந்த சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பும் இதனால் சூர்யாவுக்கு பறிபோனது.
இப்படி வணங்கான், புறநானூறு படங்களில் நடிக்க வாய்ப்பை இழந்த சூர்யா, இந்தியில் கர்ணா என்ற படத்திலும் நடிக்க கமிட் ஆன நிலையில், அந்த படத்தில் இருந்து அவரை வெளியேற்றி விட்டனர். மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாகும் அந்த படம், அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. சூர்யாவை நம்பி அவ்வளவு பெரிய பட்ஜெட்டை முதலீடு செய்ய முடியாது என, கர்ணா படத்தில் இருந்து சூர்யாவை கழட்டி விட்டுவிட்டனர்.
ஆக, நல்ல நல்ல படங்களில் எல்லாம் நடிக்கும் வாய்ப்பை சூர்யா இழந்து வரும் நிலையில், அதை நடிகர் தனுஷ் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறார். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில், கதாநாயகனாக நடிக்க தனுஷ் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியை எதிர்க்கும் கல்லூரி மாணவர் வேடம் என்பதால், சூர்யாவை விட தனுஷ்க்கு மிக சிறப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சூர்யாவை போல தனுஷூக்கு எந்த அரசியல் பிரஷரும் கிடையாது. அவரை ஒரு நடிகராக மட்டுமே அனைவரும் பார்ப்பதால், அது ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும் என்பதால், இந்த படத்தில் மிக எளிதில் தனுஷ் செட்டாகி விடுவார் என்றும் இந்த வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா மறுத்த போது, அந்த கேரக்டரில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டார் தனுஷ். ஆனால் அதில் சூர்யாவே நடிப்பதால், அதில் மிஸ் ஆனதை புறநானூறு படத்தில் தனுஷ் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.





