- Advertisement -
Homeபொழுதுபோக்குசசி படம் போலவே இல்லே, எங்கேயோ மிஸ் செய்துட்டாங்க, எல்லாமே மேம்போக்காக இருக்குது - நூறு...

சசி படம் போலவே இல்லே, எங்கேயோ மிஸ் செய்துட்டாங்க, எல்லாமே மேம்போக்காக இருக்குது – நூறு சாமி படம் குறித்து பங்கமாய் விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல ஃபீல் குட் படங்களை தந்தவர் இயக்குனர் சசி. பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 2வது படம் நூறு சாமி. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சுவாசிகா நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் டீசன்டான ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நூறு சாமி படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்த படத்தின் கதை ஒரு உண்மை கதை என்று சொல்கிறார்கள். சொல்லப்பட வேண்டிய கதையும் கூட. ஆனால் சொல்லிய விதத்தில் சொதப்பி வைத்து விட்டார்கள்.

- Advertisement -

விதவை மறுமணம் என்பது தேவையான விஷயம் தான். இந்த தேவையான விஷயம் எப்படி கட்டாயமான விஷயம் என்பதற்கு சினிமாவில் கதை சொல்ல வேண்டி இருக்கிறது. கதையில் டீடெயில் எதுவும் இல்லாததால் படத்தோடு ஒன்றி பார்க்க முடியவில்லை. அந்த சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவ்வன் படத்தில் தங்கைக்கு ஒரு ஷூ வேண்டும். அந்த ஷூ ஏன் முக்கியமானது என்பதை விளக்கிவிட்டு கதையை சொல்லி இருப்பார்கள்.

அதற்குப் பிறகு அந்த படம் அவ்வளவு பரபரப்பாக போகும். அந்த ஷூ ஏன் தேவை என்பதை அவர்கள் அழுத்தமாக சொன்னதால்தான் அந்த படத்தை இன்னமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்த படத்தில் முக்கியத்துவத்தை அழுத்திச் சொல்லவில்லை. அதனால் படம் மேம்போக்காக போய்விட்டது. வில்லனை காண்பிக்கிறார்கள். அந்த கேரக்டருக்கு எந்த ஒரு மோட்டிவ்வும் இல்லை.

- Advertisement -

ஊரார்கள் எல்லாம் அவரை ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எதற்கும் சரியான காரணம் இல்லை. இசை இதில் நம்மை தவறாக வழி நடத்தியது. எந்த இடத்தில் அழுக வேண்டும் என்பதை இளையராஜா இசை சொல்லும். அது நம்மை வழி நடத்தும். ஆனால் இந்த படத்தில் சீரியஸான இடத்தில் காமெடி மியூசிக் இருக்கிறது. காமெடியான இடத்தில் சீரியஸ் மியூசிக் இருக்கிறது.

அதனால் படம் என்ன மூடில் இருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஃபீல் குட் படமாக வந்திருக்க வேண்டியது. ஆனால் க்ரைம் திரில்லர் போல் மியூசிக் இருக்கிறது. இதில் ஒரு யூடியூப் ஃபேமிலி எல்லாம் வரும். அதெல்லாம் கதையையே வெளியே கொண்டு சென்றுவிட்டது. சசியின் படம் என்றாலே அது ஃபீல் குட்டாகவும் எமோஷனலாகவும் இருக்கும். இதுவும் அப்படி போயிருக்க வேண்டியதுதான். ஆனால் எங்கேயோ மிஸ் செய்து விட்டார்கள் என்று திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்