- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 68 படத்தின் டைட்டில் நிச்சயமாக பாஸ் கிடையாது - அந்த படத்தோட தயாரிப்பாளர்...

விஜய் 68 படத்தின் டைட்டில் நிச்சயமாக பாஸ் கிடையாது – அந்த படத்தோட தயாரிப்பாளர் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட் என்னன்னு தெரிஞ்சுக்குங்க!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். டைம் டிராவல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தில் அப்பா மகன் என்ற இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கிறார். துபாய், ஐதராபாத், சென்னை என தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1980, 90களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த நடிகர் மோகன் நடிக்கிறார். அதுவும் வில்லன் கேரக்டரில் அவர் நடிப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடிகர் பிரசாந்த் இதில் ரீ என்ட்ரி தருகிறார். வசீகரா படத்துக்கு பிறகு, சிநேகா இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

- Advertisement -

லியோ படத்தை பொருத்தவரை விமர்சன ரீதியாக அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இடைவேளைக்கு பிறகு லியோ படம் ரசிகர்களுக்கு பயங்கர அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், விஜய் 68 படம் நிச்சயம் சகல தரப்பினரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று படத்தின் துவக்கத்திலேயே வெங்கட்பிரபுவிடம் அழுத்தமாக கூறியிருக்கிறார் விஜய்.

வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை விஜய் 68 படத்தின் டைட்டில் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் ஆங்கிலப் புத்தாண்டு அன்று படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே படத்தின் டைட்டில் பாஸ் என ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து விஜய் 68 படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இதுகுறித்த ஒரு லேட்டஸ்ட் பதிவை அப்டேட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இப்போது நான் எல்லா டுவீட்டுகளையும் பார்த்தேன். உங்களது அன்புக்கு நன்றி. ஆனால் பொறுமையாக நீங்கள் இருக்க வேண்டும். வெங்கட்பிரபு ஸ்பெஷலான விஷயத்தை செய்து வருகிறார். ஆனால் கண்டிப்பாக பாஸ் கிடையாது என தெரிவித்துள்ளார்.

விஜய் 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் இருந்தே படத்தின் டைட்டில் பாஸ் இல்லை என உறுதியாக தெரிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பெயரை மிக ரகசியமாக வைத்திருந்து வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை, ஆங்கில புத்தாண்டு பரிசாக விஜய் ரசிகர்களுக்கு அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் நிச்சயம் டைட்டில் மாஸ் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

- Advertisement -

சற்று முன்