- Advertisement -
Homeபொழுதுபோக்குசிக்கந்தர் படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல் - சினிமாவுல...

சிக்கந்தர் படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல் – சினிமாவுல இப்படியும் கூட இருக்காங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். தமிழில் அவர் சூர்யா நடிப்பில் உருவாக்கிய கஜினி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து இந்தியில் கஜினி படத்தை ரீ மேக் செய்து இயக்கினார். இதில் சூர்யா கேரக்டரில் அமீர் கான் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து சில இந்தி படங்களை இயக்கிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், தமிழில் சூப்பர் ஹிட் ஆன துப்பாக்கி படத்தையும் இந்தியில் இயக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. அதே போல் கஜினி படத்தின் 2ம் பாகத்தையும் இந்தியில் டைரக்ட் செய்ய உள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் ஏஆர் முருகதாஸ் செய்யவில்லை.

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கிய நிலையில், அந்த படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இயக்க பட வாய்ப்பின்றி இருந்த ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கினார். இதற்கிடையே இந்தியில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் பட வாய்ப்பு வந்ததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.

சிக்கந்தர் படப்பிடிப்பில் ஏஆர் முருகதாஸ் பிஸியாக இருந்ததால், சிவகார்த்திகேயன் அமரன் படப்பிடிப்பில் கடந்தாண்டில் கலந்துக்கொண்டார். இப்போது சிக்கந்தர் படப்பிடிப்பு முடிந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை முடிக்க ஏஆர் முருகதாஸ் ஆயத்தமாகி விட்டார். இந்த படத்துக்கு மதராஸி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய படத்துக்கு பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான் கான் வாங்கிய சம்பளம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படப்பிடிப்பு ஆரம்பித்து முடியும் வரை சல்மான்கான் சம்பளமாக எதுவுமே வாங்கவில்லை. இப்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் டிஜிட்டல் ரைட்ஸ் சேட்டிலைட் ரைட்ஸ் ஆடியோ ரைட்ஸ் என சிக்கந்தர் படம் ரூ. 165 கோடிக்கு விலை போயுள்ளது.

நான் தியேட்டரிக்கல் முறையில் படத்தின் விற்பனை மூலம் கிடைத்த ரூ. 165 கோடியை மட்டுமே அவர் சம்பளமாக பெற்றிருக்கிறார். இந்த முறையால், தயாரிப்பாளரும் கணிசமான லாபமடைகிறார். படத் தயாரிப்பிலும் நிதி சிக்கல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி சினிமாவை வாழ வைக்க இப்படியும் கூட முன்னணி நடிகர்கள் ஒத்துழைப்பு, ஆதரவு தருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா ஹீரோக்கள் சிலர், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியே தயாரிப்பாளர்களை முக்காடு போட வைத்து விடுகின்றனர்.

சற்று முன்