- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு ஜோடியாக விஜய் 69 படத்தில் நடிக்கப் போவது அவர்தான் - அட...

நடிகர் விஜய்க்கு ஜோடியாக விஜய் 69 படத்தில் நடிக்கப் போவது அவர்தான் – அட ஏற்கனவே அந்த நடிகை விஜயுடன் 3 ஹிட் படங்களில் நடித்தவராச்சே?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு தனது 69வது படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். அதுதான் தனது இறுதிப்படம் என்றும் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி, இருந்து வருகிறது. இதில் வெற்றிமாறன், அட்லி, கவுதம் மேனன், ஏஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்பராஜ், ஆர்ஜே பாலாஜி என பலரது பெயர் அடிபடுகின்றன. கடைசியாக கார்த்திக் சுப்பராஜ், ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரில் ஒருவரை விஜய் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கு முந்தைய படமாக, தனது 69வது படத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்தும், தனது கொள்கைகள் குறித்தும் தெரிவிக்கும் விதமாக, அது அரசியல் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே எல்கேஜி என்ற அரசியல் நையாண்டி படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே முதல்வன் படத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் அந்த கேரக்டரில் அர்ஜூன் நடித்திருந்தார். அதுபோன்ற ஒரு அரசியல் மாற்றத்தை தரப்போகிற கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் நடித்தால், அது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அரசியல் களத்திற்கும் வெற்றியை குறிக்கும் படமாக இருக்கும்.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது நடித்து வரும் கோட் படத்தில் விஜய் 2 கேரக்டர்களில் நடிக்கிறார். அப்பா, மகன் என்ற ரோல்களில் நடிக்கும் விஜய்க்கு, அப்பா கேரக்டருக்கு சினேகா, மகன் கேரக்டருக்கு மீனாட்சி சவுத்ரி ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். அதே போல் விஜய் நடிக்கும் அவரது 69வது படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜயுடன் ஏற்கனவே தெறி, மெர்சல் மற்றும் கத்தி ஆகிய படங்களில் ஜோடியாக நடிக்க சமந்தா தான், இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு 36 வயதான நிலையில், விவாகரத்தான நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமந்தா ஓகே தான் என்று விஜய் தரப்பிலும் பச்சை சிக்னல் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. டைரக்டர் உறுதியான பின்பு, கதாநாயகி குறித்த அறிவிப்பும் வெளியாகும்.

- Advertisement -

சற்று முன்