- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லாரும் நயன்தாராவைதான் பெருசா எதிர்பார்த்தாங்க, ஆனால் அந்த இடத்துல நான்தான் இருந்தேன்- ஓப்பனாக போட்டுடைத்த சமந்தா,...

எல்லாரும் நயன்தாராவைதான் பெருசா எதிர்பார்த்தாங்க, ஆனால் அந்த இடத்துல நான்தான் இருந்தேன்- ஓப்பனாக போட்டுடைத்த சமந்தா, என்ன இப்படி பேசிட்டாங்க

- Advertisement -

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் சமந்தா மிக முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார். மயோசிட்டிஸ் என்ற நோயால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாலும், மிகவும் தைரியமாக அந்த நோயை எதிர்கொண்டு திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.

அந்த வகையில் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக “குஷி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்திற்கான புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம், “சாகுந்தலம்” திரைப்படத்தில் அதிதி பாலன் நடித்தது  குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சமந்தா, “கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த மகாநடி படத்தில் நான் நடிக்கவில்லையா என்ன? எந்த திரைப்படம் என்றாலும் நான் பொதுவாக அத்திரைப்படத்தில் என்னுடைய ரோல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும், அந்த ரோல் எந்தளவுக்கு எனக்கு முக்கியமாக இருக்கிறது என்பதை யோசித்துப் பார்த்துதான் நடிப்பேன்” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், “காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நான் நடித்தபோது கூட அந்த படத்தில் நயன்தாராவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் நான் ஏற்று நடித்திருந்த கதீஜா கதாபாத்திரமும் அதிகளவில் பேசப்பட்டது.

நயன்தாராவுடன் அந்த படத்தில் நடித்தது ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. நயன்தாரா ஒரு மிகச் சிறந்த நடிகை. ஆனால் கதீஜா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்