- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் இருந்து 6 மாதம் ஓய்வெடுக்கப்போகும் சமந்தா. அதனால் அவருக்கு ஏற்படப்போகும் இழப்பு - எவ்வளவு...

சினிமாவில் இருந்து 6 மாதம் ஓய்வெடுக்கப்போகும் சமந்தா. அதனால் அவருக்கு ஏற்படப்போகும் இழப்பு – எவ்வளவு தெரியுமா?

- Advertisement -

தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா கடந்த சில ஆண்டுகளாகவே “மையோசிடிஸ்” எனும் அரியவகை நோயுடன் போராடி வருகிறார். அவரது இந்த நோய் காரணமாக படும் கஷ்டங்களையும் அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதன்படி அவர் தன்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்றும் ஒரு வேலையை கூட முழுவதுமாக செய்ய முடியாது என்றும் கூறியிருந்தார். அந்த அளவிற்கு “மையோசிடிஸ்” நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று சற்று மெல்ல மெல்ல உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார்.

இந்நிலையில் மயோசிடிஸ் நோய்க்கான மேல் சிகிச்சையை பெறவும், சினிமாவில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளதால் நடிப்பில் இருந்து ஆறு மாதங்கள் தற்காலிகமாக பிரேக் எடுத்துக் கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தற்போது சினிமாவிலிருந்து விலகியுள்ள சமந்தா பூரண உடல் நலம் வேண்டி கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் நடிகை சமந்தா கோவிலுக்கு செல்லும் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் வேளையில் அண்மையில் கூட ஈஷா யோகாவிற்கு சென்ற புகைப்படங்களையும் சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டு இருந்தார். இதனை எல்லாம் கண்ட ரசிகர்கள் சமந்தா மீண்டும் பூரண உடல் நலம் பெற்று திரையுலகிற்கு திரும்ப வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Samantha-1

இந்நிலையில் சமந்தா தற்போது சினிமாவிலிருந்து பிரேக் எடுப்பதற்கு முன்பாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு சிடாடல் என்கிற வெப் சீரியஸையும் நடித்து முடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் நடித்துள்ள இந்த சிடாடல் வெப் சீரியஸ்ஸானது ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒன்றாகும். அதில் அவர் உளவாளியாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. எவ்வளவுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தானே அந்த பதிப்பில் டூப் இல்லாமல் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அதோடு சகுந்தலம் பல வேலைகள் அந்த படத்திற்கான ப்ரோமோஷன், குஷி, சிடாடல் என அடுத்தடுத்த பணிகளில் தொடர்ச்சியாக சமந்தா ஈடுபட்டிருந்ததால் தற்போது புதுப்படங்களில் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் சினிமாவில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி ஆறு மாத காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க போகும் சமந்தா 12 கோடி ரூபாயை இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் தற்போது ஒரு படத்திற்கு நான்கு கோடி வரை சம்பளமாக பெறும் சமந்தா இந்த 6 மாதங்களில் அடுத்ததாக மூன்று படங்களில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருந்தாராம். இந்நிலையில் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளதால் அந்தப் படத்திற்கான தொகை அனைத்தையும் திருப்பி கொடுத்துவிட்டார் என்றும் முழுமையான ஓய்விற்கு பிறகு உடற்தகுதி மேம்பட்டவுடன் தான் இனி சினிமாவுக்கு திரும்பவார் என்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்