தமிழ் சினிமாவில் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் விடிவி கணேஷ் சிம்புவின் நண்பர் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் நானும் ரவுடிதான் படத்தை தயாரித்தவர் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை, நயன்தாரா தனது ஆவணப்படத்தில் பயன்படுத்திய பஞ்சாயத்துதான் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதுவரை விக்னேஷ் சிவன் இயக்கிய எந்த படமுமே பெரிய அளவில் ஓடியதில்லை என்பது மாபெரும் உண்மைதான். இப்போதும் அவர் நடிகை நயன்தாராவின் கணவர் என்ற அடையாளம்தான் அவரை பிரபலப்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இல்லாமல், இப்போதுதான் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார்.
துணிவு படத்துக்கு பிறகு, அஜீத்குமார் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வந்தது. ஆனால் இறுதி முடிவாக, விக்னேஷ் சிவன் வேண்டாம் என மறுத்துவிட்டு, மகிழ் திருமேனியை அழைத்து வாய்ப்பளித்தார் அஜீத்குமார். தனது கணவருக்கு வாய்ப்பளிக்குமாறு நயன்தாரா கூறியும் அஜீத்குமார் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே படம் இயக்கும் வாய்ப்பே இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவன் ஜெயிலர் உள்ளிட்ட சில படங்களுக்கு பாடல்களை எழுதினார். அந்த பாடல்களும் கவனம் பெற்ற நிலையில், இயக்குனர் கவிஞராகி விட்டார் என விக்னேஷ் சிவனை ரசிகர்கள் பலரும் கலாய்க்கும் நிலை உருவானது. இந்த சூழலில், மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி, விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஜெ பிஸ்மி கூறியதாவது, விக்னேஷ் சிவன் ஒன்றும் வெற்றிப் பட இயக்குனர் எல்லாம் கிடையாது. இவருடைய முதல் படம் பிளாப் ஆனதால், அடுத்து படங்களே கிடைக்காமல் வாழ்வதற்கே அவர் ரொம்பவும் கஷ்டப்பட்டார். எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்றால் கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் இவர் தங்கியிருந்து, அவங்களுக்கு வேண்டிய வேலை எல்லாம் செய்து கொடுத்தார். இதை நான் சொல்லவில்லை. சோனாவிடம் நீங்கள் இதுபற்றி கேட்டால், அவங்களே நிறைய கதைகள் சொல்வார், என்று அவர் கூறியிருக்கிறார்.





