- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்... மனம் உடைந்து நடிகை போட்ட பதிவு... ஆறுதல் கூறும்...

நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்… மனம் உடைந்து நடிகை போட்ட பதிவு… ஆறுதல் கூறும் ரசிகர்கள்…

- Advertisement -

நடிகை சமந்தாவின் வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் சோகப் பாதையில் இருந்து வருகிறது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா ஆரம்பத்தில் தமிழ் சினிமாக்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். விண்ணைத்தாண்டி தருவாயா திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் மட்டும் அவர் வந்து போனது பலருக்கும் தெரிந்திருக்கும்.

 

- Advertisement -

இப்படியான சூழலில் சமந்தாவை பலருக்கும் தெரிய வைத்த திரைப்படம் தான் நான் ஈ. அந்தத் திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் ஆக, சமந்தா பலராலும் அறியப்பட்டார். பிறகு நீதானே என் பொன்வசந்தம் திரைப்படமும் சமந்தாவுக்கு ஒரு நல்ல பிளாட்பார்ம் ஆக அமைந்தது. இங்கிருந்து தனது வெற்றி பயணத்தை நடிகை தொடங்க ஆரம்பித்தார்.

 

- Advertisement -

முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து டாப் நடிகையாக மாறினார் சமந்தா. தெலுங்கு திரைப்படங்களிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது. இந்த சமயத்தில் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கல்யாணத்திற்குப் பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

 

குறிப்பாக புஷ்பா படத்தில், ஊ சொல்றியா மாமா என்னும் குத்துப் பாடலுக்கு நடனமாடி பரபரப்பாக பேசப்பட்டார். இப்படியான சூழலில் நாக சைதன்யா சமந்தா ஜோடி பிரிவதாக அறிவித்தனர். சட்டப்படி இருவரும் விவாகரத்து செய்வதாக தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மயோஸிடிஸ் எனும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா.

 

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் மீண்டும் வருவதாக அவர் தெரிவித்து இருந்தார். இருப்பினும் முழு நேர படப்பிடிப்புகளில் அவரால் பங்கு பெற முடியாமல் போய் உள்ளது. தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அவர், படங்களை தேர்வு செய்வதை குறைத்து வருகிறார்.

 

இப்படியான சூழலில் திடீரென அவரது தந்தை ஜோசப் பிரபு மரணம் அடைந்திருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து, தனது இணைய பக்கத்தில், அப்பா மீண்டும் உங்களை சந்திக்கும் வரை என் இதயம் நொறுங்கிப் போய் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் விமர்சையாக நடைபெற இருக்கும் சூழலில், அவரின் முன்னாள் மனைவி சமந்தா தற்போது சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவருக்கு திரை உலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்