- Advertisement -
Homeபொழுதுபோக்குஒன்று சேர்ந்த சங்கரின் உதவி இயக்குனர்கள்... கேக் வெட்டி கொண்டாட்டம்... காரணமான ஜென்டில் மேன்

ஒன்று சேர்ந்த சங்கரின் உதவி இயக்குனர்கள்… கேக் வெட்டி கொண்டாட்டம்… காரணமான ஜென்டில் மேன்

- Advertisement -

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஷங்கர். ஒருவர் ஒரு இயக்குநரிடம் இரண்டு படங்கள் உதவி இயக்குநராக பணியாற்றுவதே இப்போது குதிரை கொம்பாக இருக்கும் சூழலில் ஷங்கரோ எஸ்.ஏ.சியிடம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்தார். அப்படி அவர் இருக்கும்போதே படம் இயக்குவதற்கு வாய்ப்பு வந்தாலும் முழுமையாக கற்றுக்கொண்டுதான் படம் இயக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தவர். அதேபோல் பவித்ரனிடமும் ஷங்கர் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்தவருக்கு கடந்த 1993ஆம் ஆண்டு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது. குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜுன்,மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோரை வைத்து ஜெண்டில்மேன் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே ஷங்கரின் மேக்கிங் க்ளிக் ஆக படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. கூடவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் சேர்ந்து படத்துக்கு வேறு ஒரு கலரை கொடுத்தது.

- Advertisement -

முதல் படம் வெற்றிபெற்றாலும் அந்தப் படத்தில் இட ஒதுக்கீடு பற்றிய தவறான பார்வையை ஷங்கர் வைத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அதில் முதலில் கமல் ஹாசன் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் கதையில் அவருக்கு உடன்பாடு இல்லாததால் அவரால் நடிக்க முடியவில்லை. இதை கமலும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஒருபக்கம் விமர்சனம் எழுந்தாலும் முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து அவர் படங்கள் இயக்கினார். அப்படி அவர் இயக்கிய காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்கல் சென்சேஷனல் ஹிட்டடித்தான். குறிப்பாக முதல்வன் படமும் இந்தியன் படமும் பெரும் வெற்றி பெற்று அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர் என்ற பெயரை பெற்று தந்தன.

- Advertisement -

தொடர்ந்து வெற்றி பாதையில் சென்றுகொண்டிருந்த ஷங்கருக்கு பாய்ஸ் படம் சறுக்கலை கொடுத்தது. கதை ரீதியாக படம் அட்டகாசமாக இருந்தாலும் ஷங்கரிடமிருந்து அப்படி ஒரு ஜானரை ரசிகர்கள் எதிர்பார்க்காததால் படம் படுதோல்வியை சந்தித்து கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. அதனையடுத்து அந்நியன் படத்தை இயக்கினார்.

விக்ரம், சதா, விவேக் உள்ளிட்டோரை வைத்து ஷங்கர் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் மல்ட்டிபிள் டிஸ் ஆர்டர் என்ற விஷயத்தை முதன்முறையாக தமிழ் சினிமாவில் பயன்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவர் இயக்கிய எந்திரன் படம் இந்திய அளவில் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரையும் ஷங்கர் வாங்கினார்.

கடைசியாக அவர் இயக்கிய ஐ, 2.0 ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. இதனால் ஷங்கர் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் தற்போது ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர், கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். விரைவில் இரண்டு படங்களும் ரிலீஸாகவுள்ளன.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில் மேன் படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஜென்டில் மேன் தான் ஷங்கரின் முதல் படம். இதை சிறப்பிக்கும் வகையில் பலருக்கும் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் தற்போது இயக்கிவரும் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களின் உதவி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து சங்கருக்கு பூங்கொத்து வழங்கி கேக் வெட்டி கொண்டாடினார். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.

- Advertisement -

சற்று முன்