- Advertisement -
Homeபொழுதுபோக்குபா ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம்... படத்தில் அந்த ஒரு கதாபாத்திரம்...

பா ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம்… படத்தில் அந்த ஒரு கதாபாத்திரம் இருக்கவே இருக்காதாம்… என்னங்க இப்படி சொல்லிட்டீங்க…

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தங்கலான். விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக தங்கச்சுரங்கத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதையை பா ரஞ்சித் எழுதி இருந்ததால் பலரும் இதனை எதிர் பார்த்தார்கள்.

இதற்கு ஏற்றது போலவே அதன் டீசரும் அமைந்தது. காட்சிகள் பிரம்மாண்டமாகவும், ரசிகர்கள் புருவத்தை உயர்த்தும் அளவுக்கும் இருந்தன. மிகப்பெரும் பொருட் செலவில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் விமர்சனத்தை பெறவில்லை.

- Advertisement -

குறிப்பாக இரண்டாம் பாதி திரைக்கதையில் சற்று தொய்வு இருப்பதாக பலரும் கூறியிருந்தார்கள். படத்தின் வசனங்கள் புரியவே இல்லை என்பதும் பலரின் விமர்சனங்கள் ஆக இருந்தது. இதனால் தங்கலான் திரைப்படம் பெரிய அளவுக்கு ரீச் ஆகவில்லை.

இருப்பினும் அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் கூறியது. இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் ரஞ்சித். ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு வேட்டுவம் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இதில் கெத்து தினேஷ் தான் கதாநாயகனாக நடிக்கிறாராம். ஆர்யா படத்தில் இடம்பெற அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தை ரஞ்சித் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோக படத்தில் பகத் பாசிலும் இருப்பதாக சிலர் பேசிக் கொண்டார்கள். இருப்பினும் படக்குழுவிடமிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கான பிரம்மாண்ட செட் மட்டும் தற்போது போடப்பட்டு வருகிறதாம். அனேகமாக இந்த மாதத்தின் இறுதியில் இருந்து இதன் சூட்டிங் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டுவம் திரைப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையாக உருவாகிறதாம். அது மட்டுமல்ல படத்தில் ஹீரோயின் கதாபாத்திரமே இருக்காது என்று கூறுகிறார்கள். இப்படி பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் அந்த திரைப்படத்தில் இருப்பது பலருக்கும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்