- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா குழந்தைகளுக்கு தாய் மாமா முறையில் நான் தான் அந்த பங்ஷன பண்ணப்போறேன் - நடிகர்...

நயன்தாரா குழந்தைகளுக்கு தாய் மாமா முறையில் நான் தான் அந்த பங்ஷன பண்ணப்போறேன் – நடிகர் சந்தானம் பேட்டி

- Advertisement -

நடிகர் சந்தானத்தின் நடிப்பில் அண்மையில் வெளியான “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த “டிடி ரிட்டன்ஸ்” படத்தினை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் நடிகை சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் இந்த “டிடி ரிட்டன்ஸ்” படமானது நீங்கள் எதிர்பார்த்த சந்தானம் படமாக இருக்கும் என்று ஏற்கனவே சந்தானம் இசை வெளியீட்டு விழாவின் போது பேசியிருந்தார்.

- Advertisement -

அதன்படி ஹாரர் காமெடி மூவியாக வெளியாகியுள்ள இந்த படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் வேளையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் சந்தானம் நயன்தாரா குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Nayanthara-and-Wikki

அந்தவகையில் சந்தானம் அந்த பேட்டியில் கூறியதாவது : வல்லவன் படம் நடித்ததில் இருந்தே எனக்கு நயன்தாராவை நன்றாக தெரியும். சினிமா துறையில் எனக்கு இருக்கும் ஒரு தங்கை என்றால் அது நயன்தாரா தான். எப்பொழுதுமே அவர் என்னை அன்புடன் “அண்ணன்” என்று அழைப்பார். நான் எப்பொழுது அவர் வீட்டிற்கு சென்றாலும் எனக்கு தடபுடலான விருந்து வைப்பார்.

- Advertisement -

அந்த வகையில் அண்மையில் நான் நயன்தாராவின் வீட்டிற்கு சென்றிருந்த போது கூட எனக்காக அவர் கேரியரில் சாப்பாடு செய்து வைத்திருந்தார். அப்பொழுது நயன்தாராவிடம் உனது குழந்தைக்கு தாய் மாமன் முறையில் நான் தான் காதுகுத்தி சீர் செய்வேன் என்று நயன்தாராவிடம் கிண்டலாக கூறியதாகவும் சந்தானம் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்