- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது பேய் படம் தான் ஆனாலும்.. 28-ஆம் தேதி வெளியாக இருக்கும் தனது டிடி ரிட்டர்ன்ஸ்...

இது பேய் படம் தான் ஆனாலும்.. 28-ஆம் தேதி வெளியாக இருக்கும் தனது டிடி ரிட்டர்ன்ஸ் படம் குறித்து பேசிய – சந்தானம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக திகழ்ந்து வந்த நடிகர் சந்தானம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்கிற படத்தின் மூலம் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் முழுநேர கதாநாயகனாக நடிக்க தொடங்கிய அவர் அதன் பின்னர் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்களில் அடுத்தடுத்து கதாநாயகனாக நடித்து வந்தார்.

Santhanam-1

பின்னர் ஏ1, டகால்டி, பிஸ்கோத், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், சபாபதி என அடுத்தடுத்து அவரது நடிப்பில் படங்கள் வெளியானாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் அவருக்கு அந்த படங்களெல்லாம் வெற்றி பெற்ற படங்களாக அமையவில்லை. இதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் பல படங்கள் அவருக்கு சறுக்களையே தந்தன. இந்நிலையில் தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள “டிடி ரிட்டன்ஸ்” அவரது கரியரின் அடுத்த கட்ட பயணத்திற்கு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக “இவன் வேற மாதிரி” படத்தில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மான்சி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்.கே என்டர்டெயின்மன்ட் தயாரித்துள்ள இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் இந்த திரைப்படமானது ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

DD-Returns

இந்நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் பேசுகையில் கூறியதாவது : நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக இந்த “டிடி ரிட்டன்ஸ்” முழுக்க முழுக்க சந்தானம் படமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அனைவரது ஒத்துழைப்போடும் இந்த படம் உருவாகியுள்ளது. தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றன. அதனைத் தொடர்ந்து அதே போன்று இந்த “டிடி ரிட்டன்ஸ்” படம் மக்களின் மனதை கவரும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் இந்த படம் அது மாதிரி இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படி இந்த படம் இருக்கும். இந்த படத்திற்கு தங்களின் மேலான ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக சந்தானம் பேசினார். அதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் பிரேம் ஆனந்த் கூறுகையில் : இன்று உங்கள் முன்னால் நான் இயக்குனராக நிற்க காரணம் சந்தானமும், ராம் பாலாவும் தான். சந்தானத்துடன் நான் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நீங்கள் வழக்கமாக பார்த்த பேய் படங்கள் போன்று இந்த “டிடி ரிட்டன்ஸ்” இருக்காது. முற்றிலும் இந்த படம் புதிதாக இருக்கும் என பிரேம் ஆனந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்