- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் உண்மையில் பெரிய படம் எது? - மெகா பட்ஜெட் படங்கள் குறித்து...

தமிழ் சினிமாவில் உண்மையில் பெரிய படம் எது? – மெகா பட்ஜெட் படங்கள் குறித்து ஜாவா சுந்தரேசன்… ஸாரி காமெடி நடிகர் சாம்ஸ் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழில் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருப்பவர் சாம்ஸ். குறிப்பாக இவரை ஜாவா சுந்தரேசன் என்று சொன்னால் ரசிகர்களுக்கு சட்டென இவரது முகம் நினைவுக்கு வந்துவிடும். சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் சந்தானத்துக்கு பைவ் ஸ்டார் சாக்லேட் தரும் ஜாவா சுந்தரேசன் கேரக்டரில் அசத்தியிருப்பார் நடிகர் சாம்ஸ்.

நடிகர் சாம்ஸ் பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நகைக்கடைக்காரர் மகன் கேரக்டரில் பைக்கில் வரும் அவரை மிரட்டி பணம் பறிப்பார் படித்துறை பாண்டியாக நடித்திருந்த வடிவேலு. சச்சின் படத்தில் வடிவேலு நண்பர்களில் ஒருவராக இருப்பார்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இந்த படத்தில் காளி வெங்கட் சத்யராஜ் ரோஷினி ஹரிப்ரியன் சாங்ஸ் ஷெலி மற்றும் விஷ்வா உள்ளிட்ட பல முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற ஜூன் 6ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது காமெடி நடிகர் சாம்ஸ் கூறியதாவது, சின்ன படம் பெரிய படம் எது என்பதை தீர்மானிப்பது மக்கள் தான். 300 கோடி ரூபாய் செலவில் ஒரு படம் எடுத்து அதன் 302 கோடி வசூலித்தால் அது பெரிய படம் கிடையாது.

- Advertisement -

20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் படம் இப்போது 80 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதுதான் உண்மையில் பெரிய படம். மக்களால் கொண்டாடப்படும் படம் தான் பெரிய படம் என்று நடிகர் சாம்ஸ் கூறியிருக்கிறார்.

நடிகர் சாம்ஸ் சொன்ன இந்த கருத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கமர்ஷியல் என்ற பெயரில் முன்னணி நடிகர்கள் எல்லாம் குப்பை படங்களில் நடித்து ரசிகர்களை ஏமாற்றி கணிசமான லாபம் பார்த்து வருவதாக சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் சாம்ஸ் உண்மையான பெரிய படம் மக்கள் கொண்டாடும் படங்கள்தான் என்ற உண்மையை பகிரங்கமாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்