- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வார்த்தை ஓகே வா என விஜய் யோசித்தார், நான்தான் அவரை பேச சொன்னேன் -...

இந்த வார்த்தை ஓகே வா என விஜய் யோசித்தார், நான்தான் அவரை பேச சொன்னேன் – இப்படி லோகேஷ் கனகராஜ் கூறும் காரணம் என்ன தெரியுமா

- Advertisement -

சமீபத்தில், விஜய் நடித்த லியோ படத்தின் டிரெய்லர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தின் டிரெய்லர், இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ப்ரீ டிக்கெட் புக்கிங் மட்டுமே 15 கோடி ரூபாயை கடந்துள்ளது. படம் பற்றிய பல எதிர்பார்ப்புகள், ரசிகர்களை தவிக்க விடுகிறது. ரசிகர் சிறப்பு காட்சி இல்லாததும், ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்நிலையில், லியோ படத்தின் டிரெய்லரில் விஜய் பேசிய அந்த வசனம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்திய ஒரு நேர்காணலில் கூறியதாவது, பிளடி ஸ்வீட் என்ற வார்த்தையையே பலமுறை யோசித்துதான் வைத்தோம். ஆனால், இந்த வார்த்தை, கதைக்கு தேவைப்பட்டதாக இருந்தது. ஒரு எமோசனில், தன்னை அறியாமல், எல்லை மீறி பேசும் ஒரு வார்த்தைதான் அது. கண்ட்ரோல் இல்லாத அந்த வார்த்தை, கோபத்தால் வெளிப்படுகிறது.

அன்று காலை, ஷூட்டிங் நடந்த போது விஜய் இந்த வசனத்தை பேசலாமா, சரியா வருமா, ஓகே வா என யோசித்தபடி என்னிடமும் கேட்டார். அவருக்கு தயக்கம் இருந்தது. ஆனால் நான்தான் அவரை பேச சொன்னேன், இந்த வசனம் நடிகர் விஜய் பேசும் வசனம் அல்ல. அந்த படத்தில் வரும் பார்த்திபன் என்கிற கேரக்டர் பேசும் வசனம்தான் அது.

தன்னிலை மீறி, எல்லை மீறி, ஆத்திரத்தை புஷ் பண்ணும்போது ஒரு மனிதன் தன்னை மறந்து அப்படி பேசுவது, யதார்த்த வாழ்க்கையில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அது டிரெய்லரில், விஜய் கத்திய பிறகு, அந்த சண்டை காட்சிக்கு இடையே அந்த வசனம் கண்டிப்பாக தேவைப்பட்டது. ஆனால், தியேட்டரில் படம் பார்க்கும்போது அது மியூட் ஆகிவிடும். சென்சாரில் கண்டிப்பாக அந்த வசனம் வராது.

பொதுவாக ஒருமுறை கதையை சொல்லி, காட்சிகளை விளக்கி விட்டால் விஜய், அதுபற்றி எதுவுமே கேட்க மாட்டார். அதனால், அவரிடம் பணிசெய்வது ஜாலியாக, சுதந்திரமாக தான் இருக்கும். பல நேரங்களில் என்னை யோகி அண்ணா என கூப்பிட்டு கிண்டல் செய்வார். ஆனால், இந்த வசனத்தை பேசுவதற்கு முன் என்னிடம் கேட்டு, நான் பேசுங்க என கூறிய பின்பே பேசினார், என வெளிப்படையாக கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இதுவரை நடிகர் விஜய் அந்த தவறான வார்த்தையை பேசி விட்டதாக, பலத்த விமர்சனம் எழுந்த நிலையில் அது படத்தில் அவர் நடித்த கேரக்டர் பேசிய ஒரு வசனம். அதுவும் தன்னிலை மீறி ஆத்திரத்தில் பலரும் பேசுகிற ஒரு வார்த்தையாக படத்தில் அந்த கேரக்டரிடம் இருந்து அந்த வார்த்தை வெளிப்பட்டது. அதுவும், படத்தின் இயக்குநரான நான் கூறியதால்தான் விஜய் பேசினார். தியேட்டரில் படத்தில் அந்த வார்த்தை இடம்பெறாது என தெளிவுபடுத்தி, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சற்று முன்