- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தர் சி விஷால் மீண்டும் இணையும் படத்தின் டைட்டில் இதுதான், காமெடி ரோலில் நடிக்க...

சுந்தர் சி விஷால் மீண்டும் இணையும் படத்தின் டைட்டில் இதுதான், காமெடி ரோலில் நடிக்க சம்பளத்தை டபுள் ஆக்கிய சந்தானம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் காமெடி கூட்டணியில் கடந்த 2012ம் ஆண்டில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு பொங்கலுக்கு திட்டமிட்டப்பட்ட படம் மதகஜ ராஜா. ஆனால் சில கடன் பிரச்னைகளால் இந்த படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த படத்தில் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் மனோபாலா மணிவண்ணன் சிட்டிபாபு சோனா சூட் சுவாமிநாதன் நிதின் சத்யா சடகோபன் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றியை கொடுத்தது.

- Advertisement -

குறிப்பாக நடிகர் விஷாலுக்கு இந்த படம் கம்பேக் தந்தது. படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 15 கோடியாக இருந்த நிலையில், ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால் மீண்டும் சுந்தர் சி விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாக்க ஏற்பாடுகள் வேகமாக நடந்தது. இந்த படத்தை ஏசி சண்முகம் தயாரிக்கிறார்.

ஆனால் மதகஜ ராஜா படத்தை பொருத்தவரை வழக்கமான சுந்தர் சியின் கவர்ச்சி காதல் காமெடி மசாலா கலவைதான். விக்ரம் ஜோதிகா ரீமாசென் நடித்த தூள் படத்தின் மற்றொரு வடிவம் என்றால் அது மிகையல்ல. அதே அரசியல்வாதி, பழிவாங்கும் ஹீரோ கதைதான். ஆனால் சந்தானம் சரவெடி பஞ்ச் டயலாக், சடலமாக நடித்த மனோபாலா தான் படத்தை தூக்கி நிறுத்தி விட்டனர்.

- Advertisement -

ஆம்பள மதகஜ ராஜா படங்களுக்கு பிறகு 3வது முறையாக சுந்தர் சி விஷால் கூட்டணி இணையும் இந்த படத்தின் டைட்டில் ஆம்பள 2 என வைக்கப்பட உள்ளது. சுந்தா் சி இயக்கத்தில் ஏற்கனவே விஷால் பிரபு வைபவ் சந்தானம் ரம்யா கிருஷ்ணன் கிரண் ரத்தோர் உள்ளிட்டோர் நடித்த படம்தான் ஆம்பள. அதையே ஆம்பள 2 என 2ம் பாகமாக சுந்தர் சி இயக்க ஸ்கிரிப்ட் ரெடி செய்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் காமெடியன் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் ஆம்பள 2 படத்தில் மீண்டும் காமெடி ரோலில் சந்தானம் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆனால் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் சந்தானம் இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளமாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சந்தானம் காமெடி படத்தை வேற லெவலில் கொண்டு செல்லும் என்பதால், ஆம்பள 2 படத்தில் சந்தானம் நடிப்பது உறுதியாகி விடும் என்று நம்பலாம்.

- Advertisement -

சற்று முன்