நடிகர் கார்த்தி இப்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடித்த பல படங்களில் டபுள் ரோலில் அப்பா மகனாக நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கடந்த 2022ம் ஆண்டில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படம் வெளியானது. இதில் லைலா நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடிகை லைலா ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சீனியர் நடிகர் சிவக்குமார் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்கள் இருந்தாலும் அதையும் கடந்து நல்ல நடிகராக பல படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி முன்னுக்கு வந்தவர்.
காதல் காமெடி அதிரடி சென்டிமென்ட் என எல்லாவிதமான கேரக்டர்களிலும் பிசிறு தட்டாமல் நடித்து வரும் நடிகர் கார்த்திக்கு, இயக்குனர் ராஜூ முருகன் இயக்கிய அவரது 25வது படம் ஜப்பான் மிக மோசமான தோல்வி படமாக அமைந்தது. எனினும் மெய்யழகன் படம் கார்த்திக்கு பழைய இமேஜை பெற்றுத் தந்துவிட்டது என்றே சொல்லலாம்.
கடந்த சில மாதங்களாக சர்தார் 2 படப்பிடிப்பில் கார்த்தி கலந்துக்கொண்டார். சமீபத்தில் மைசூரில் நடந்து வந்த ஷூட்டிங்கில் சண்டைக்காட்சியில் நடித்த போது ஏற்பட்ட விபத்தில், கார்த்திக்கு காலில் பலத்த அடிபட்டது. கால்கள் வீங்கிய நிலையில் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். எனினும் சில வாரங்கள் கட்டாய ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து படப்பிடிப்புக்கு செல்ல சில வாரங்கள் ஆகும் என்பதால் சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகளில் கார்த்தி ஈடுபட்டுள்ளார். டப்பிங் ஸ்டுடியோவில் சர்தார் 2 படத்துக்காக டப்பிங் பேசி வருகிறார். மேலும் வருகிற மே 25ம் தேதி நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் வருகிறது. அந்த நாளில் சர்தார் 2 படம் டீசர் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கார்த்தி பிறந்த நாளில் சர்தார் 2 டீசர் வெளியாக உள்ளது, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அத்துடன் வருகிற தீபாவளிக்கு சர்தார் 2 படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவாகி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் தீபாவளிக்கு தான் சர்தார் படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அந்த சென்டிமென்ட் காரணமாக, சர்தார் 2 படத்தையும் தீபாவளி பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது.





